மியான்மர் கலவரம்: இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு தலைவர்கள் வருகை!

முஸ்லிம் எதிர்ப்பு கலவரம் நடைபெறும் மியான்மருக்கு ஒ.ஐ.சி. என அழைக்கப்படும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC – Organization of Islamic Cooperation) பிரதிநிதிகள் இன்று வருகை தருகின்றனர்.

அரசுப் பிரதிநிதிகள், தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஒ.ஐ.சி. பிரதிநிதி குழுவினர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ராக்கேன் மாநிலத்திற்கும் செல்கின்றனர்.

ஒ.ஐ.சி.யின் பொதுச் செயலாளர் இக்மலுத்தீன் இஹ்ஸான் ஓக்லு தலைமையிலான இக்குழுவில் பல்வேறு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். 57 முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்புதான் ஒ.ஐ.சி.

ஒரு வருடம் முன்பு மியான்மரில் நிகழ்ந்த கலவரத்தில் 240 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளில் அகதிகளாக உள்ளனர்.

வெள்ளிக்கிழமை ஒ.ஐ.சி. குழுவினர் ராக்கேன் மாநிலம் செல்வர். ஒ.ஐ.சி. பிரதிநிதிகள் வருகைக்கு அனுமதி அளிக்கப்பட்டதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட புத்த சாமியார்கள் போராட்டம் நடத்தினர்.

Related

முக்கியமானவை 8251510315642230673

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item