PFI நடத்திய மாநில அளவிலான விளையாட்டு இறுதி போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி!
http://koothanallurmuslims.blogspot.com/2013/11/pfi.html
பாப்புலர்
ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்”
என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த
வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம்
இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி
மாரத்தான்,உடற்பயிற்சி வகுப்புகள்,ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ
முகாம்கள்,இரத்த தான முகாம்கள்,அரசு மருத்துவமனைகளை தூய்மைப்படுத்துதல்
போன்ற பல்வேறு நலப் பணிகள் முழுவீச்சில் மக்களின் பேராதரவுடன் நடைபெற
உள்ளது.
பிரசாரத்தின் ஒரு பகுதியாக மாநில
அளவில் இறுதி போட்டி 15.11.13 காலை 8 மணியளவில் மதுரை புதூர் பகுதியில்
டி-நோப்லி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. விளையாட்டு போட்டியினை மாநில
தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் துவக்கி வைத்தார். விளையாட்டின் ஆரம்பமாக
கைபந்து போட்டியினை மாநில ஒலிம்பிக் சங்க துணைத்தலைவர் சோலை எம்.ராஜா
அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு
மாவட்டங்களிலிருந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் இறுதியாக மாலை பரிசளிப்பு நிகழ்ச்சி 06.30 மணியளவில்
நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில
செயலாளர் எஸ். இல்யாஸ் அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்
இந்தியாவின் மாவட்ட தலைவர் எம்.ஏ. இத்ரீஸ் அவர்கள் வரவேற்புரை
நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாப்புலர் ஃப்ரண்ட்
ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது, டி-நோப்லி
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் ஏ.வின்சென்ட் மதன் பாபு,
தொழிலதிபர்கள் ஹோட்டல் ராயல் கோர்ட் யாசின், வசந்தம் குழுமம் சிராஜுதீன்,
தொழிலதிபர் நஜ்முதீன் கனி மற்றும் சீட்ஸ் அறக்கட்டளை தலைவர் ராஜா ஹசன்
ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியின் இறுதியாக பாப்புலர்
ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினரும், பிரசாரத்தின்
பொறுப்பாளருமான ஏ.கே அமீன் அவர்கள் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில்
பொதுமக்கள், மாணவர்கள் என முன்னூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து
கொண்டனர்.