வடமாநிலங்களில் பாரம்பரிய அரசியலை கைவிட்டு சொந்தமாக அரசியல் பாணியை உருவாக்கும் முஸ்லிம்கள்!
http://koothanallurmuslims.blogspot.com/2013/11/blog-post_26.html
பா.ஜ.கவை பயந்து காங்கிரசுக்கோ, இதர பிராந்திய அரசியல் கட்சிகளுக்கோ வாக்கு வங்கியாக மாறிய முஸ்லிம் சமுதாயம் புதிய அரசியல் பாணியை வரையறுக்க துவங்கியுள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் புதிய பரிசோதனைக்கு முஸ்லிம்கள் தயாராகி வருகின்றார்கள்.
காங்கிரஸின் வஞ்சனையும், பா.ஜ.கவின் பாசிச கொள்கைகளும் தோலுரித்துக் காட்டி கல்வி கற்ற முஸ்லிம்கள் இம்முறை மூன்று மாநிலங்களிலும் பல்வேறு கட்சிகளின் சார்பாகவும், சுயேட்சையாகவும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.
12 சதவீத முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட ராஜஸ்தானில் அவர்கள் காங்கிரஸின் வாக்குவங்கியாகவே இது நாள் வரை இருந்துள்ளனர்.
முஸ்லிம்களுக்கு பொருத்தமான மண் என்று அடையாளம் கண்டு கொண்டதால் புதிய அரசியல் பாணிக்கு துவக்கம் குறிக்க எஸ்.டி.பி.ஐ, வெல்ஃபெயர் பார்டி போன்ற நவீன அரசியல் சக்திகள் முக்கியமாக ராஜஸ்தானை தேர்ந்தெடுக்க காரணமாகும்.
எஸ்.டி.பி.ஐ கட்சி டெல்லியில் ஒரு தொகுதியிலும், மத்தியபிரதேச மாநிலத்தில் 5 தொகுதியிலும் போட்டியிடுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக 6 முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.
ப்ரொஃபசனல்கள் மற்றும் உயர் கல்வி கற்ற முஸ்லிம்கள் வழக்கத்திற்கு மாறாக சுயேட்சை வேட்பாளர்களாக களமிறங்கி காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவுக்கும் சவால் எழுப்புகின்றனர்.
ராஜஸ்தானில் கோட்டா(வடக்கு) தொகுதியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ வேட்பாளரான முஹம்மது ஷாஃபி (வயது 37) ஒரு சமூக ஆர்வலராவார். ஆட்சியில் இருக்கும் போது முஸ்லிம்களுக்கு எதிராக பாசிஸ்டுகள் தாக்குதல் நடத்தும்போது கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறது காங்கிரஸ் என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.
தேர்தல் நெருங்கும்போது பா.ஜ.கவையும். ஆர்.எஸ்.எஸ்ஸையும் காட்டி பயமுறுத்தி முஸ்லிம் வாக்குகளை பெட்டியில் விழச்செய்வது காங்கிரஸின் தந்திரமாகும். ஆனால், இம்முறை முஸ்லிம்களை முட்டாள்களாக்க முடியாது என்பது பிரச்சாரத்தில் கிடைக்கும் ஆதரவு தெளிவுப்படுத்துகிறது என்று ஷாஃபி கூறுகிறார்.
65 ஆண்டுகளாக நாட்டை ஆளும் காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களை சக்திப்படுத்த என்னச் செய்துள்ளது? என்று ஷாஃபி கேள்வி எழுப்புகிறார்.
முஸ்லிம் சமுதாயம் கண்ணை மூடிக்கொண்டு தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற காங்கிரஸின் எண்ணத்தை மாற்றுவதாக இத்தேர்தல் முடிவுகள் அமையும் என்று ஜெய்ப்பூர் தொகுதியில் வெல்ஃபெயர் பார்டி சார்பாக போட்டியிடும் வழக்கறிஞர் பக்கர் ஃபாரூக் கூறுகிறார்.
முஸ்லிம்கள் செல்வாக்குப் பெற்ற சிக்ரி, சுர்சாகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் சுயேட்சைகளான முஸ்லிம் வேட்பாளர்களும் இதுமாதிரியான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
சிக்ரியா தொகுதி முஸ்லிம் வேட்பாளர் வாஜிப் அலி எம்.டெக் பட்டதாரியாவார். அரசியல் கட்சிகள் முஸ்லிம் சமுதாயத்திற்காக எதுவும் செய்யவில்லை என்று வாஜிப் அலி கூறுகிறார்.
சுர்சாகரில் சுயேட்சை வேட்பாளரான ஷபானா அப்பாஸி தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏவான பா.ஜ.க வேட்பாளர் சந்திரகாந்தா வியாஸிற்கு கடுமையான சவாலை எழுப்புவார் என கருதப்படுகிறது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர், இந்தூர், ஷியோபூர், தேவாஸ், புர்ஹான்பூர் ஆகிய தொகுதிகளிலும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா, காமா, போண்டி, டெல்லியில் கிராடி ஆகிய தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ கட்சி போட்டியிடுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், ஜுஞ்சுனு, கோட்டா ஆகிய தொகுதிகளில் வெல்ஃபெயர் பார்டி போட்டியிடுகிறது. டெல்லியில் மாட்டியா மஹல், பல்லிமாரன், ஆர்.கே.புரம், ஓக்லா, கிருஷ்ணநகர், சீலாம்பூர் ஆகிய தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியில் முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.