அங்கோலாவில் இஸ்லாத்திற்குத் தடை!

தெற்கு ஆப்ரிக்காவில் இருக்கும் அங்கோலாவில் இஸ்லாம் மார்க்கம் தடை செய்யப்பட்டுள்ளது. மஸ்ஜிதுகள் அனைத்தும் “அடுத்த அறிவிப்பு வரும் வரை” மூடப்பட்டுள்ளன. சில மஸ்ஜிதுகள் இடிக்கப்பட்டுள்ளன. அப்படி இடிக்கப்பட்ட ஒரு மஸ்ஜிதைத்தான் படத்தில் காண்கிறீர்கள். இந்தச் செய்தியை அங்கோலாவிலுள்ள செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ளன.

அங்கோலாவின் அரசியல் நிர்ணயச் சட்டம் அனைத்து மதத்தினருக்கும் சுதந்திரம் வழங்கியிருக்க, அங்கோலா அரசு இஸ்லாம் மார்க்கத்தைத் தடை செய்தது உலக மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படிப்பட்ட கடுமையான முடிவை உலகிலேயே இந்த ஒரு நாடுதான் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பர் 22ம் தேதி அங்கோலாவின் கலாச்சாரத்துறை அமைச்சர் ரோசா குரூஸ் இ சில்வா இவ்வாறு அறிவித்தார்: “இஸ்லாம் சட்டப்பூர்வமாக்கப்படுவது நீதித்துறை மற்றும் மனித உரிமைகள் அமைச்சகத்தினால் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால் அடுத்த அறிவிப்பு வரும் வரை மஸ்ஜிதுகள் அனைத்தும் மூடப்படுகின்றன.”

இவ்வாறு அறிவித்த கலாச்சாரத்துறை அமைச்சர், ஏன் ஒரு மதம் சட்டபூர்வமாக்கப்பட வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கவில்லை. சட்டபூர்வமில்லாத மதப் பிரிவுகளைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் இப்போதைய செயல்தான் மஸ்ஜிதுகளை மூடுவது என்று அவர் கூறினார். அங்கோலாவின் புதிய சட்டங்களின் படி நிறைய மதப் பிரிவுகள் திடீரென்று கிரிமினலாக மாற்றப்பட்டு விட்டன.

நவம்பர் 24ம் தேதி அங்கோலா அதிபர் ஜோஸ் எட்வர்டோ டோஸ் சந்தோஸ், “இஸ்லாமிய செல்வாக்குக்கு அங்கோலாவில் நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைப்பதற்குண்டான முயற்சியில் நாடு இறங்கியுள்ளது” என்று கூறினார். ஏன் இஸ்லாம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதற்கு இவரும் விளக்கம் தரவில்லை.

லுவாண்டாவின் கவர்னர் பெண்டோ பெண்டோ, “நாடு ‘தீவிரவாத’ முஸ்லிம்களை வரவேற்பதில்லை. ஆதலால் அங்கோலா அரசு மஸ்ஜிதுகளையும், முஸ்லிம்களின் இன்னபிற வழிபாட்டுத்தலங்களையும் சட்டபூர்வமாக்காது” என்று கூறினார்.

ஆப்ரிக்க நாடான அங்கோலாவில் பெரும்பாலான மக்கள் அவர்களின் நாட்டுப் பழங்குடி சார்ந்த மதங்களைப் பின்பற்றுகின்றனர்.  47 சதவீத மக்கள் இந்தப் பழங்குடி சார்ந்த நம்பிக்கைகளைப் பின்பற்றுகின்றனர் என்றும், 38 சதவீத மக்கள் ரோமன் கத்தோலிக்க (ஆர்.சி.) கிறித்தவத்தையும், 15 சதவீத மக்கள் கிறித்தவத்தின் இன்னொரு பிரிவான புரோட்டஸ்டண்ட் கிறித்தவத்தையும் பின்பற்றுகின்றனர் என்றும் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அங்கோலாவின் மொத்த மக்கள்தொகையான 1.85 கோடி மக்களில் 80,000-90,000 மக்கள் இஸ்லாத்தைத் தங்கள் வாழ்வின் வழிமுறையாக ஏற்று வாழ்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் மேற்கு ஆப்ரிக்காவிலிருந்தும், லெபனானிலிருந்தும் இடம் பெயர்ந்தவர்கள்.

Related

முக்கியமானவை 8625297401798460067

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item