இலங்கை முஸ்லிம்களுக்கு இந்தியாவின் பங்களிப்பு போதுமானதாக இல்லை

இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களுக்கு இந்தியாவின் பங்களிப்பு போதுமான வகையில் இல்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷிதிடம் இலங்கை உள்நாட்டு  முஸ்லிம் அமைச்சர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் எதிர்கொண்ட பிரச்னைகள் இந்திய அரசின் உயர் மட்டத்துக்கு சரியாக எடுத்துரைக்கப்படவில்லை என்பது சல்மான் குர்ஷித்துடனான சந்திப்பின்போது விளங்கக் கூடியதாக இருந்தது என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷிதை இலங்கை வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான குழுவினர் சந்தித்து உள்ளூர் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து விவாதித்துள்ளனர்.

இலங்கையில் நீண்ட காலமாக இருக்கும் இனப் பிரச்னைக்கான தீர்வு எட்டப்படும்போது, முஸ்லிம் மக்களின் கருத்துகளும் உள்வாங்கப்பட வேண்டும் என்று தமது தரப்பில் இந்திய வெளியுறவு அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டதாக ரிஷாத் பதியுதீன் கூறுகிறார்.

முஸ்லிம் மக்களுடன் எந்தவிதமான கலந்துரையாடலும் இல்லாமல்தான் அரசியல் சாசனத்தின் 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது என்பதையும் தாங்கள் சல்மான் குர்ஷிதிடம் எடுத்துக் கூறியதாகவும் அவர் கூறினார்.

இனப் பிரச்னைக்கான தீர்வு தொடர்பில், இலங்கை முஸ்லிம் மக்கள் மற்றும் தலைவர்களின் எதிர்பார்ப்புகளை விரைவில் எழுத்துபூர்வமாக தங்களுக்கு அளிக்கும்படி இந்திய வெளியுறவு அமைச்சர் கோரியுள்ளதாகக் கூறிய ரிஷாத் பதியுதீன், இன்னும் இரண்டு வாரக் காலத்துக்குள் அதை அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன எனவும் தெரிவித்தார்.

Related

உலகம் 6461375484380310022

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item