எகிப்தின் இராணுவப் புரட்சியாளர்கள் தமது கரங்களாலேயே தமது புதைகுழிகளைத் தோண்டுகின்றனர் - கர்ளாவி

எகிப்தின் அநியாயக்கார இராணுவப் புரட்சியாளர்கள் தமது கரங்களாலேயே தமது புதைகுழிகளை தோண்டிக் கொள்கிறார்கள் என்று கலாநிதி யூசுஃப் அல் கர்ளாவி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

பலஸ்தீன் மற்றும் புனித குத்ஸை நோக்கிய ஸியோனிசவாதிகளின் சதித்திட்டங்கள் குறித்த இஸ்லாமிய உம்மத் விழிப்படைய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எகிப்திய இராணுவப் புரட்சியாளர்களுக்கு வக்காலத்து வாங்கும் எகிப்திய நீதிமன்றம் அநியாயத்திற்கு துணைபோவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அல் அஸ்ஹர் மாணவர்களுக்கு 17 வருட சிறைத்தண்டனை தீர்ப்பளித்த நீதிபதிக்கு பிரபஞ்சத்தின் நீதிபதியிடமிருந்து கேடு உண்டாகும் எனவும் அவர் எச்சரித்தார்.

மிகத் தெளிவான அநியாயத்திற்கு வக்காலத்து வாங்கும் ஷெய்குல் அஸ்ஹர் மற்றும் சில அஸ்ஹர் உலமாக்களுக்களின் நிலைப்பாடு குறித்தும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

இவ்வநியாயம் நிகழ்வதை இறைநியதி எதிர்க்கிறது என்றார் அவர்.

எகிப்து சிரியா மற்றும் ஈராக்கின் அநியாயக் காரர்களும் அதற்கு துணைபோனவர்களும் அல்லாஹ்விடம் தவ்பா செய்து மீளுமாறு அவர் வேண்டிக் கொண்டார்.

கடந்த வாரம் டோஹா வில் இடம்பெற்ற குத்பாப் பிரசங்கத்திலேயே அவர் இவ்விடயங்களை பகிர்ந்து கொண்டார். இறைவெற்றியில் நம்பிக்கை வைத்தல் தொடர்பாக பேசிய அவர் நம்பிக்கையீனமும் நிராசையும் துாக்கி வீசப்பட வேண்டும். அல்குர்ஆன் நிராசையடைவதை கடுமையாக கண்டிக்கிறது. நிராசை காபிர்களின் பண்பாகும். காபிர்களைத்தவிர வேறு எவரும் இறையருளில் நிராசை கொள்ள மாட்டார்கள். இறைஉதவியில் நாம் எப்போதும் நம்பிக்கை வைப்போம். எம்மால் முடியுமானளவு நாம் செயற்படுவோம். இறை நாட்டம் எமது பலவீனங்களை பூரணப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.

பிரபஞ்சத்தில் நடப்பவற்றை விட்டு அல்லாஹ் பொடுபோக்காக இருக்கிறான் என்று நினைப்பது குறித்து எச்சரிக்கிறேன். சண்டாளர்களை பொய்களை இட்டுக்கட்டி ஏற்றுமதிசெய்வோரை அல்லாஹ் மிகக் கடுமையாகப் பிடிப்பான் எனவும் அவர் தெரிவித்தார்.

- மீள் பார்வை

Related

ஹமாஸிற்கு சர்வதேச ஆதரவு அதிகரிக்கிறது

இஸ்ரேலின் பயங்கரவாத ராணுவம் காஸ்ஸாவின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்ட சூழலில் ஹமாஸிற்கு ஆதரவு சர்வதேச அளவில் பெருகி வருகிறது. 2008-09 காலக்கட்டத்தில் இஸ்ரேல் காஸ்ஸாவின் மீது நடத்...

இஸ்ரேல் தூதரகத்தை நோக்கி மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர்கள் கண்டனப் பேரணி

ஃபலஸ்தீன் காஸ்ஸாவில் அப்பாவி மக்களை கொன்றுக் குவிக்கும் இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலை கண்டித்து டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை நோக்கி மனித உரிமை ஆர்வலர்களும், மாணவர்களும் க...

மகிழ்ச்சியில் காஸ்ஸா - அஞ்சி நடுங்கும் டெல் அவீவ்

ஃபலஸ்தீன் போராட்ட வரலாற்றில் முக்கிய தினமாக கடந்த வியாழன் (15/11/2012) அமைந்தது. ஃபலஸ்தீன் போராளிகளின் தீரமிக்க நாயகன் அஹ்மத் ஜஃபரி கடந்த புதன்கிழமை சியோனிச பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டார். அவர...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item