மதுக்கூரில் சங்பரிவார் தீவிரவாதிகளின் இனசெயல் - களத்தில் TMMK - PFI




தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்(TMMK) சார்பாக தொடர்ந்து 18 ஆண்டுகாலமாக பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 தேதி அன்று பல்வேறு போராட்டக்களங்களை அமைத்து ஜனநாயக வழியில் போராடி வருகின்றது.இந்த வருடம் மாநிலத்தின் பெரு நகரங்கள் சுமார் 50 இடங்களில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமுமுக மாநில தலைமை அறிவித்து இருந்தது.அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் (தெற்கு) சார்பாக தஞ்சாவூரில் நடைபெற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ள மதுக்கூர் நகர தமுமுக சார்பாக 5 வேன்களில் தஞ்சாவூர் நோக்கி சென்றனார்.(இதில் ஒரு வேனில் பெண்கள்).தமுமுகவின் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றுகொண்டு இருந்தது.

மதுக்கூரிலிருந்து 3 கீ.மி தொலைவில் உள்ள புலவஞ்சி என்ற கிராமத்தில் இந்து முண்ணனி ஒன்றிய தலைவர் போஸ் என்பவன் எனது அடியாட்களுடன் சாலையின் நடுவே தனது வாகனத்தை குறுக்குநெடுக்காக நிறுத்திக்கொண்டு இந்த வழியாக டிசம்பர் 6 போராட்டத்துக்கு வாகனங்கள் செல்லக்கூடாது என கெக்கரித்து உள்ளான்.வாகன டிரைவர் சகோதரர் ரியாஸ் அகமது மட்டும் இறக்கி சென்று ஏன் ? ரோட்டை மறிக்கின்றீர்கள் நாங்கள் போராட்டத்து செல்லவேண்டும் என கூறியுள்ளார்.அதற்கு போஸ் இது என் ஊர்.எனது ரோடு யாரும் இந்த வழியாக செல்லக்கூடாது என மீண்டும் கூறியுள்ளான்.மதுக்கூர் காவல் நிலையத்துக்கு நிர்வாகிகள் தகவல் கொடுக்க எப்போதும் போல் தாமதமாக வந்த மதுக்கூர் காவல் துறை வழக்கம்போல் முஸ்லிம்களை நீங்கள் கலைந்து செல்லுங்கள் நாங்கள் பார்த்து கொள்கின்றோம் என கூற போராட்டத்திற்கு சென்ற முஸ்லிம்கள் எங்களை சம்மந்தமில்லாமல் வழிமறித்த போஸ் மற்றும் அவனது அடியாட்களை கைது செய்யவேண்டும் என கூற போஸை நோக்கி சென்ற மதுக்கூர் காவல்நிலைய ஆய்வாளர் அவர்களை பார்த்து போஸின்தம்பி வக்கீல் ராஜபிரபு என்பவன் நீ போயா என்னயா பண்ணுவே கேஸ்தானே போடுவே போட்டுக்கோ என கூறிக்கொண்டே அருகில் வீடு கட்டுவதற்காக அடுக்கிவைக்கப்பட்டிருந்த செங்கற்களை எடுத்து முஸ்லிம்கள் மீது வீசினார்கள்.இதில் முஸ்லிம்களின் வாகன வரிசையில் முதலில் நின்று கொண்டிருந்த வாகனத்தின் கண்ணாடிகள் உடைந்தது.அதுவரை பொறுமையின் புகழிடமாக இருந்த முஸ்லிம்கள் அவனே கைது செய்யவேண்டும் என கூறி புலவஞ்சி கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.புலவஞ்சி கிராமத்திலிருந்து சாலை மறியலை கலைத்துவிட்டுவிட்டு மதுக்கூர் வடக்கு பெரமையா கோவில் நான்கு சாலைகளில் முஸ்லிம்கள் அமர்ந்து போஸ் மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற முழக்கங்களுடன் சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்து செய்துகொண்டிருந்தனர்.

மாவட்ட தமுமுக நிர்வாகிகளுக்கு தகவல்கள் கொடுக்கப்பட்டது. அதிராம்பட்டிணத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி டிசம்பர் 6 போராட்டத்திற்கு சென்றவர்களுக்கு இந்த சம்பவங்கள் எடுத்துக்கூறப்பட்டது.உடனடியாக களத்தில் இறக்கிய அதிராம்பட்டிண தமுமுகவினர் பட்டுக்கோட்டை மணிக்கூண்டில் புலவஞ்சியில் முஸ்லிம்களின் வாகனம் தாக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல் செய்தனர்.இதனால் பட்டுக்கோட்டை நகரில் சுமார் 1/2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையில் மதுக்கூரில் தொடர்ந்து ஒரு மணிநேரம் நடைபெற்ற சாலை மறியலால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.சாலை மறியல் நடைபெற்ற இடத்திற்கு வந்த மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் அவர்கள் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் போரில் பெரமையா கோவிலிருந்து கலைந்து சென்று காவல்நிலையத்தில் திரண்டனர்.முஸ்லிம்கள் காவல்நிலையத்தில் திரண்ட சில நிமிடங்களில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தர்மராஜன் அவர்கள் மதுக்கூர் காவல்நிலையம் வந்தடைந்தார்.நடந்த விபரங்களை கேட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி செய்து காவல்நிலையத்தின் முன்பு திரண்டவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துங்கள் என முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக எஸ்பியிடம் பேச்சுவார்த்தை நடத்தியவர்களிடன் கூறினார்.அதன்படிஒரு சிலரை தவீர்த்து அனைவரும் கலைந்து சென்றனர்.முறைப்படி தமுமுக சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டது.தமுமுக வாகனங்களை தாக்கியவர்களில் 4 நபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்கள்.முக்கிய குற்றவாளிகள் இந்து முண்ணனி ஒன்றிய தலைவர் போஸ்,அவனது தம்பி வக்கீல் ராஜபிரபு ஆகியோர் மட்டும் தலைமறைவாக உள்ளனர்.

சங்பரிவார்களின் இந்த செயலை கண்டித்து தமுமுக மட்டுமில்லாது பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா உட்பட அனைத்து இஸ்லாமிய அமைப்பினரும் ஒற்றுமையுடன் இருந்து செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தை தொடர்ந்து தஞ்சாவூரில் நடைபெற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் தலைமையேற்று நடத்திய கோவை சுல்தான் மற்றும் மாவட்ட தலைவர் அப்துல் ஜப்பார்,மாவட்ட செயலாளர் அகமது ஹாஜா,மாவட்ட மமக செயலாளர்அகமது கபீர், மாவட்ட பொருளாளர் சேக் அலாவுதீன்,பாப்புலர் ஃப்ரண்ட் இந்தியாவின் மாவட்ட செயலாளர் ஹாஜி சேக்.மற்றும் அதிரை நகர நிர்வாகிகள் உட்பட பலரும் மதுக்கூரில் முகாமிட்டு இருந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து குற்றாவளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரினார்கள்.

Related

முக்கியமானவை 6870019039458306858

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item