KIFF நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்!

குவைத்தில் பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து வரும் குவைத் இந்தியா ஃப்ரடர்நிட்டி ஃபாரம் (KIFF) கடந்த 06-12-2013 வெள்ளிக்கிழமை அன்று ஜம்இய்யத்துல் இஸ்லாஹி அரங்கத்தில் வைத்து நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மாலை 6.45 மணிக்கு மௌலவி ஷம்சுத்தீன் திருக்குர்ஆன் ஓதி நிகழ்ச்சியை இனிதே துவக்கி வைத்தார். KIFF-ன் தமிழ் பிரிவு செயலாளர் உஸ்மான் அலீ வரவேற்புரை நிகழ்த்தினார்.
அதை தொடர்ந்து பொதுக்கூட்டத்தை தலைமை பொறுப்பேற்று நடத்திய KIFF-ன் தமிழ் பிரிவு தலைவர் ராஜிக் ரஹ்மான் தலைமை உரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “முஸ்லிம்களின் இந்திய அரசியல் நிலை” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் (SDPI) மாநிலத் தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி அவர்கள் தனது உரையில் பாபரி மஸ்ஜித் இடிப்பு, அதன் சூழ்ச்சியின் பாசிச பின்னணி ஆகியவற்றை தோலுரித்துக் காட்டினார்
.
இந்திய முஸ்லிம்களின் அரசியல் அவல நிலை பற்றி எடுத்துரைத்த அவர், இந்திய முஸ்லிம்கள் அரசியலில் வலிமை பெறுவதின் அவசியத்தையும், நமது இந்திய தேசத்திற்கு பாசிச இந்துத்துவவாதிகளால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை எதிர்கொண்டு, தலித்களையும், சிறுபான்மையினரையும், ஒட்டுமொத்த இந்தியர்களையும் பாதுகாப்பது நமது கடமை என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தார்.

அதை தொடர்ந்து பொதுமக்களின் அனைத்து கேள்விகளுக்கும் SDPI-யின் மாநில தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி அவர்கள் விளக்கம் அளித்தார். இறுதியாக சிக்கந்தரின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அம்ஜத் நிகழ்ச்சி முழுவதையும் தொகுத்து வழங்கினார்.

Related

முக்கியமானவை 9187190755142884850

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item