வேலூரில் இந்து முன்னணி மாநில செயலாளர் வெட்டிக் கொலை!

வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் இன்று மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து வேலூரில் பதட்டம் ஏற்ப்பட்டுள்ளது.

வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்து முன்னணியினர் வன்முறையில் இறங்கினர். பஸ் நிலையத்திற்குள் புகுந்து பஸ்களின் கண்ணாடிகள் உடைத்தனர். மேலும் காவல்துறையினரையும் அடிக்க பாய்ந்தனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் அரசு உடமையாக்கப்பட்டது. இதை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பினர் கடந்த இரண்டு வார காலமாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம், இந்து முன்னணி மாநில செயலாளர் சு.வெள்ளையப்பன் தலைமையில் நடந்து வந்தது. இந்நிலையில் இன்று மதியம் 3.15 மணியளவில் வேலூர், ராமகிருஷ்ணா மடத்தின் அருகே சு.வெள்ளையப்பன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் பாரதிய ஜனதா மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் அரவிந்த் ரெட்டி அவரது கிளினிக் அருகிலேயே படுகொலை செய்யப்பட்டார். இதேபோல் கடந்த பிப்ரவரி மாதம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த கே.ஜி.ரமேஷ், அவரது வீட்டின் அருகிலேயே மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுவரை கே.ஜி.ரமேஷ் சம்பந்தப்பட்ட கொலையாளிகள் போலீசின் கையில் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related

முக்கியமானவை 1403547141725021860

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item