கர்நாடக முதல்வரை சந்தித்த தமிழக 24 இஸ்லாமிய கூட்டமைப்பினர்

கர்நாடக முதல்வர் சித்தாரமையாவை  இன்று தமிழ்நாடு அனைத்து முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்தனர். அப்போது கீழ்க்கண்ட கோரிக்கைகள் முதலமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.

கடந்த ஏப்ரல் 17-ம் தேதி பெங்களூர் மல்லேசுவரத்தில்  நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 15 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவர்களும் அப்பாவிகள். இந்த வழக்கிற்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும்  இல்லை. உள்நோக்கத்துடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதை பல உண்மை அறியும் குழுக்களும் தெளிவுபடுத்தியுள்ளன. கைது செய்யப்பட்ட இளைஞர்களின்  கிச்சான் புகாரி என்ற இளைஞர் உட்பட  பலர் போலீஸ் காவலில் கடும் சித்ரவதைக்கும், தாக்குதலுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டை ஏற்கும்படி நிர்பந்த படுத்தப்பட்டுள்ளனர்.

இவற்றை கண்டித்து தமிழகத்தில் தொடந்து நாங்கள் பிரச்சாரத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறோம். எனவே இந்த வழக்கை தேசிய புலனாய்வு நிறுவனம்(NIA)  விசாரனைக்கு மாற்ற பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அதோடு அப்பாவிகள் விடுதலை செய்யப்படவும், காவல்துறையின் அத்துமீறலை தடுத்து நிறுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை கவனமாக  செவிமடுத்த  முதலமைச்சர் சித்தாரமையா  உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்தார்.இந்த சந்திப்பின் போது கர்நாடக மாநில முஸ்லிம் MLA க்களும்,முன்னாள் மத்திய அமைச்சர்கள் CM இபுராஹிம்,ஜாபர் ஷெரிப் ஆகியோர் உடனிருந்தனர்.


இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பாக

ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ஹனிபா, M.H.ஜவாகிருல்லாஹ்.MLA (மனித நேய மக்கள் கட்சி),  A.S.இஸ்மாயில் (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா), K.K.S.M.தெஹ்லான்பாகவி (SDPIகட்சி), S.M.பாக்கர் (இந்திய தவ்ஹித் ஜமாஅத்), J.இனாயத்துல்லாஹ் (இந்திய நேஷனல் லீக்),  A.S.உமர் பாரூக் (மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்), தர்வேஸ் ரஷாதி (இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம்), மன்சூர் காஸிபி (ஜம்யியத்துல் உலமாயேஹிந்த்), S.N.சிக்கந்தர் (வெல்பேர் பார்ட்டி),  M.குலாம் முஹம்மது (தாருல் இஸ்லாம் டிரஸ்ட்), சபீர் அஹமது (ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related

முக்கியமானவை 5300662706373889272

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item