எங்கே முர்ஸி? அதிபருக்கு ஆதரவாக களமிறங்கிய பல்லாயிரக்கணக்கான மக்கள்!

ஜனநாயகரீதியாக முதன் முதலாக எகிப்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர்  முஹம்மது முர்சியை ராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியில் இருந்து நீக்கியதை கண்டித்து பல்லாயிரக்கணக்கான இஃவானுல் முஸ்லிமீன் உறுப்பினர்களும், முர்ஸியின் ஆதரவாளர்களும் எகிப்தின் வீதிகளை ஸ்தம்பிக்க வைத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது ராணுவம்  நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

கெய்ரோவுக்கு அருகில் உள்ள நஸ்ர் நகரத்தில் ரபாஅ அல் அதவிய்யா மஸ்ஜிதுக்கு அருகே நேற்று காலை முதல் இஃவானுல் முஸ்லிமீன் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் திரண்டனர். ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு எதிர்ப்பு அணை உடைத்து கிளம்பியது. இதில் ஒரு பிரிவினர் முர்ஸியை வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக கூறப்படும் பிரசிடன்ஸியல் கார்டை நோக்கி பேரணி நடத்தினர்.

எங்கே முர்ஸி? எங்கே முர்ஸி? என்ற முழக்கத்தை எழுப்பியவாறு மக்கள் முன்னேறினர். கவச வாகனங்கள், எந்திர துப்பாக்கிகளுடன் ராணுவம் களத்தில் இருந்தது. அங்கு ஆபீஸர்ஸ் கிளப்பிற்கு வெளியே திரண்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. ஆனால், துப்பாக்கிச்சூடு நடத்தியது தாங்கள் அல்ல என்று ராணுவச் செய்தி தொடர்பாளர் கூறுகிறார்.

‘உங்களின் சகோதரர்கள் தற்போது ரிபப்ளிகன் கார்டில் முர்ஸியை வெளியேக் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். உங்களின் சகோதரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்துகிறது’-நஸ்ர் நகரத்தில் திரண்ட மக்களிடையே இஃவான்களின் தலைவர்களில் ஒருவரான முஹம்மது அல்பெல்தாகி கூறினார்.

முர்ஸியை மீண்டும் அதிபராக்க வேண்டும் என்று நாங்கள் ராணுவத்திற்கு கோரிக்கை விடுக்கிறோம். ரிபப்ளிகன் கார்டில் நாங்கள் கூட்டத்தோடு உயிரை தியாகம் செய்வோம். முர்ஸி மீண்டும் அதிபராகும் வரை நாங்கள் வீதிகளில் இருந்து நீங்கமாட்டோம் என்று அல் பெல்தாகி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இஃவான்களின் தலைவர்களை பல இடங்களிலும் போலீஸ் தடுத்து வைத்துள்ளது. காஸ்ஸாவிற்கான ரஃபா எல்லை மூடப்பட்டுள்ளது. இதனிடையே இஸ்லாமியவாதிகள் செல்வாக்குப் பெற்ற சூரா கவுன்சிலை கலைப்பதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இடைக்கால அதிபர் அட்லி மன்சூர் அறிவித்துள்ளார்.

New India TV

Related

முஸ்லிம்கள் 4534569167018777787

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item