BJP மாநில செயலாளர் படுகொலை: சேலம் பகுதிகளில் கலவர சூழல்!
கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி பா.ஜ.க தொண்டர்கள் கண்டனப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல இடங்களிலும் வன்முறையை கட்டவிழித்துவிட்டுள்ளனர். அரசு வாகனங்கள் தாக்கப்பட்டு பேருந்துகள் தீக்கிரையாகின.
மோதல் சூழலால் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்துக்கு இடையூறு செய்த பா.ஜ.க தொண்டர்களை திருப்பூரிலும், கும்பகோணத்திலும் போலீஸ் கைது செய்துள்ளது.
ரமேஷின் உயிருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டபோதும் அரசு அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டுகிறார். குற்றவாளிகளை உடனடியாக சட்டத்தின் முன்னால் கொண்டுவரவேண்டும் என்று பா.ஜ.கவின் தேர்தல் பிரச்சார கமிட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
ரமேஷின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டுள்ளது. உடலில் 17 வெட்டுக்காயங்கள் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் வழக்குப் பதிவுச் செய்து விசாரணையை துவக்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை ஏற்படுத்தியுள்ளது.