BJP முழுஅடைப்பின் பெயரால் தமிழகம் முழுவதும் வன்முறை!

பா.ஜ.கவின் தமிழக பொதுச் செயலாளர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, பிஜேபி மற்றும் சங்க்பரிவார் அமைப்பினர் நடத்திய முழு அடைப்பின் போது புதுசேரியில் பல இடங்களில் வன்முறை வெடித்தது.

முழு அடைப்பையொட்டி, புதுச்சேரியில் காலை 6 மணி முதல் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. புதுச்சேரி அரசு பஸ்கள், தமிழக அரசு பஸ்கள் மட்டுமே இயங்கின.

புதுச்சேரியில் தனியார் பஸ்களே அதிகம் என்பதால் காலையில் பணிக்குச் செல்பவர்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஒரு சில தனியார் பள்ளிகள் மட்டுமே இயங்கின. அரசுப் பள்ளிகள் வழக்கம் போல இயங்கின.

நகரத்தின் முக்கிய வீதிகளான நேரு வீதி, காந்தி வீதி, மிஷன் வீதி, அண்ணாசாலை, மறைமலை அடிகள் சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட சாலைகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், நெல்லித்தோப்பு மார்க்கெட் உள்ளிட்ட மார்க்கெட்டுகளும் இயங்கவில்லை.

இந்நிலையில், தமிழகத்திலிருந்து புதுச்சேரி வந்த அரசு பஸ்கள் மற்றும் புதுச்சேரி அரசு பஸ்கள் மீது மர்மநபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.

தனியார் பொறியியல் கல்லூரி பஸ் மீதும் கற்கள் வீசப்பட்டன. இதில் 30-க்கும் மேற்பட்ட பஸ்கள் சேதமடைந்தன. சில இடங்களில் லாரிகள்

மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், கோவையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த தமிழக அரசு பஸ் மீது நோனாங்குப்பம் அருகே கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த பஸ் ஓட்டுநர் வேல்முருகனின் கண்களில் காயம் ஏற்பட்டது. அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அண்ணாசாலையில் பஸ் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக, இந்து முன்னணி மாநில நிர்வாகி சுனில் குமார், செயலாளர் முருகையன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். காரைக்காலில் முஸ்லிம் கடை உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு

கோவையில்  NGO காலனி பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது, காரைக்காலில் முஸ்லிம்கள் நடத்தும் தொழில் நிறுவனங்கள் மீதும் அங்கு வேலைசெய்வோர் மீதும் திட்டமிட்ட தாக்குதல்கள் நடந்துள்ளது, திண்டுக்கல் கச்சேரி தெருவில் உள்ள சிங்கப்பூர் பிளாசா அடித்து நொறுக்கப்பட்டது.

ராமநாதபுரத்தில் பயங்கர கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் ராமநாதபுரம் செய்யதம்மாள் ஜும்மா பள்ளியின் உள்ளே காவி பயங்கரவாதிகள் தீ வைத்தும், சேதப்படுத்தியும் சென்றுள்ளனர்

Related

முக்கியமானவை 6800718903119634890

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item