முஸ்லிம் சகோதரத்துவ தலைமையகம் மீது எதிர்கட்சியினர் தாக்குதல்

எகிப்து அதிபர் முஹம்மது முர்சி ராஜினாமாச் செய்யக்கோரி எதிர்கட்சியினர் கெய்ரோவில் ஞாயிற்றுக்கிழமை துவக்கிய போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.

வன்முறையில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோருக்கு காயம் ஏற்பட்டது.

மேலும் எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ பேரவையின் தேசிய தலைமையகத்தை எதிர்கட்சியைச் சார்ந்த சில விஷமிகள் தீவைத்துக் கொளுத்தினர்.

முகத்தமில் உள்ள இஃவானின் தலைமையகத்தில் இருந்து ஏராளமான பொருட்களை கடத்திச் சென்றபிறகு விஷமிகள் தீவைத்ததாக அல்ஜஸீரா கூறுகிறது.

எகிப்தின் அதிபராக முஹம்மது முர்ஸி தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் ஆண்டு நிறைவுறும் வேளையில் எதிர்கட்சியினர் அராஜகமான போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

நாட்டின் பாதுகாப்புப் பிரச்சனைகளை கையாளவோ, பொருளாதார கட்டமைப்பை சீரமைக்கவோ முர்ஸியால் இயலவில்லை என்றும் ஆகையால் அவர் தனது பதவியை ராஜினாமாச் செய்து தேர்தலை சந்திக்கவேண்டும் என்று எதிர்கட்சியினர் வலியுறுத்துகின்றனர். முர்ஸிக்கு எதிர்கட்சியினர் இறுதி கெடு விதித்துள்ளனர். இன்று அவர் ராஜினாமாச் செய்யாவிட்டால் போராட்டம் புதிய திசையை நோக்கு நகரும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனிடையே, அதிபர் ராஜினாமாச் செய்ய எதிர்கட்சியினர் விதித்துள்ள கெடுவை முர்ஸி நிராகரித்துவிட்டார். ‘நான் ராஜினாமா செய்துவிட்டு அடுத்து வேறொருவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், சில மாதங்களில் அவருக்கு எதிராக போராட இன்னொரு கூட்டம் தயாராகும். இந்த தவறை அங்கீகரிக்க முடியாது. அது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.’ என்று முர்ஸி கூறியுள்ளார்.

இதனிடையே எகிப்து அமைச்சரவையில் இருந்து ஐந்து அமைச்சர்கள் பதவியை ராஜினாமாச் செய்துள்ளனர். எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர்கள் ராஜினாமாச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே 48 மணிநேரங்களுக்குள் கெய்ரோ நகரத்தை விட்டு வெளியேறுமாறு போராட்டக்காரர்களுக்கு ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related

முக்கியமானவை 4559111871937040110

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item