எகிப்து அதிபர் முர்சி பதவி இறக்கம்: பின்னணியில் அமெரிக்காவின் சதி!

2011 ஆம் ஆண்டு எகிப்தில் நடந்த மக்கள் புரட்சிக்குப் பின்னர், தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை மக்கள் ஏகமனதாக தேர்ந்தெடுத்தனர்;

முர்சி, ஜனநாயகத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபரானார். கடந்தவாரம் நடந்த சதி புரட்சியினால் அதிபர் முர்சி, எகிப்து இராணுவத்தால் பதவி பறிக்கப்பட்டார்.

எட்டு தசாப்தத்திற்கு மேலாக சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சியின்கீழ் அடிமை பட்டு கிடந்த எகிப்து மக்களுக்கு அதிபரான முர்சிக்கு, நிலைமையைச் சீராக்க முழுதாக இரு ஆண்டுகள்கூட அவகாசம் கொடுக்கப்படாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

அதிபர் முர்சியை பதவி இறக்க இலட்சக்கணக்கானோர் போராடினார்கள்;

அதனாலேயே இராணுவம் தலையிட்டு அவரை நீக்கியது என்று நியாயம் பேசப்படுகிறது. அதிபர் முர்சிக்கு எதிராக வாக்களித்த அந்த 48% மக்களையும் ஒருமித்து போராட்ட களத்திற்குக் கொண்டுவந்தால், அது ஒரு பெரிய எண்ணிக்கையாகத்தான் இருக்கும். அதற்காக பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை பதவி நீக்கலாமா? இதற்கு ஜனநாயகத்தில் இடமுள்ளதா என்ன?, இப்படியான அதிசயங்கள் மத்திய கிழக்கு நாடுகளில்தான் நடக்கும்.

முஸ்லீம் சகோதரத்துவ சுதந்திர மற்றும் நீதி கட்சி தேர்தலில் வெற்ற வெற்றிகளின் புள்ளி விபரம்

2011 மார்ச் அரசியலமைப்பு வாக்கெடுப்பு

ஆதரித்தவர்கள் 77%
எதிரானவர்கள் 23%

மக்கள் சட்டசபைத் தேர்தல்

முஸ்லீம் சகோதரத்துவ சுதந்திர மற்றும் நீதி கட்சி 46%
இஸ்லாமிஸ்ட் ப்லோக் கட்சி 25%

ஷூறா சபை தேர்தல்

முஸ்லீம் சகோதரத்துவ சுதந்திர மற்றும் நீதி கட்சி 58%
இஸ்லாமிஸ்ட் ப்லோக் கட்சி 25%

ஜனாதிபதி தேர்தல்

முஹம்மத் முர்சி 52%
அஹ்மத் சபிக் 48%

2012 டிசம்பர் புதிய அரசியலமைப்பு வாக்கெடுப்பு

ஆதரித்தவர்கள் 64%
எதிரானவர்கள் 36%

போராடியவர்கள் யார்?

எகிப்திலுள்ள 10 சதவீத யூதர்களும் கிறித்தவர்களும் இந்தப் போராட்டத்தில் முழுமையாக பங்கெடுத்தார்கள். நாட்டின் ஒவ்வொரு மூலையிலுள்ள யூதர்களும் கிறித்தவர்களும் இப் போராட்ட களத்திற்குக் கொண்டுவரப் பட்டார்கள். இவர்கள் அதிபர் முர்சியை எதிர்ப்பதற்குக் காரணம் இருக்கிறது; அதுதான் எகிப்தில் ஒரு இஸ்லாமிய ஆட்சி வரப்போகின்றது! இதே காரணம்தான் உலக இஸ்லாமிய விரோத நாடுகள் முர்சியை வெறுப்பதற்குக் காரணம். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் அறிக்கையிலிருந்து அமெரிக்கா இந்தச் சதி பின்னணியில் இருந்தது உறுதியாகின்றது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ஈ ரைஸ், இராணுவம் முர்சியைப் பதவியிறக்குவதற்கும் ஒரு மணி நேரம் முன்பு அதிபர் முர்சியைத் தொடர்பு கொண்டு, அலுவலகத்தில் இருந்து வெளியறிவிட அறிவுறுத்தியதாக ஒரு அறிக்கை கூறுகிறது.
அரபு உலக வெளியுறவு மந்திரி ஒருவர் அமெரிக்காவின் தூதுவர் கரியாலயத்திலிருந்து அதிபர் முர்சியை தொடர்பு கொண்டு, அமைச்சரவை மாற்றங்களைச் செய்யவும் உதவி அதிபரையும், அதிகாரமுள்ள ஆளுநர்களையும் நியமிக்க ஒரு இறுதி வாய்ப்பு அமெரிக்காவினால் கொடுக்கப்பட்டது எனவும் நியூயார்க் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது.

மேலும் அதிபர் முர்சியின் உயர்மட்ட வெளியுறவு கொள்கை ஆலோசகர் இஸாம் அல் ஹட்டாத், எகிப்து அமெரிக்க தூதுவர் ஆனி டபிள்யூ பேட்டர்சனை அழைத்து அதிபர் முர்சி அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அடிபணியவில்லை என்று கூறினார்.

நாம் சிந்திக்கவேண்டியது, நம் நாட்டு அரசியல் தலைவர்களைப் போல அதிகாரமும் பணமுமே முர்சியின் குறிக்கோளாக இருந்திருந்தால் அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து போயிருக்கலாம். ஆனால், சர்வாதிகாரத்துக்கு எதிராக போராடி, ஜனநாயகத்தின்மூலம் தம்மை நம்பி ஆட்சியில் அமர்த்திய எகிப்து எகிப்து மக்களுக்கு அவர் துரோகம் செய்யக்கூடாது என நினைத்தார்; ஆகவேதான் அவர் அமெரிக்காவுக்கு அடிபணியவில்லை!

அதிபரின் ஆலோசகர் இஸாம் அல் ஹட்டாத், முர்சி அமெரிக்காவின் மிரட்டல்களுக்குச் செவிசாய்க்கவில்லை என்ற தகவலை அமெரிக்க தூதுவர் டபிள்யூ பேட்டர்சனுக்குத் தெரிவித்த சற்று நேரத்தில் அல் ஹட்டாத்தின் கைத்தொலைபேசிக்கு பேட்டர்சனிடமிருந்து, "உங்களுடைய விளையாட்டுகளை இன்னும் ஒரு மணித்தியாலங்களுக்குள் எங்களுடைய அம்மா நிறுத்தபோவதாக சொன்னார்" என குறுஞ்செய்தி வந்ததாகவும் இதில் அவர் அம்மா எனக்குறிப்பிட்டது அமெரிக்காவை என்றும் நியூயார்க் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது.
மேலும் அவ்வறிக்கையில், "எகிப்தியர்கள் பழிச்சொல்லாக சொல்லும் மேற்கத்திய அதிகாரம் என்று சொல்லுவார்கள். பில்லியன் டாலர் பெறுமதியான எகிப்திய இராணுவ உதவியுடன் நடந்து முடிந்தது" என்று கூறுகிறது.

அமெரிக்காவின் டொலர் பெறுமதிக்கு எகிப்தின் இராணுவ அமைச்சர் ஜெனரல் அப்துல் பாட்டாஹ் அல் சிசி விலை போய்விட்டார் என்பதை இந்த அறிக்கையின் மூலம் நாம் நேரடியாக புரிந்து கொள்ளலாம்.

அந்த ஒரு மணித்தியாலத்திற்குப் பின்னர் எகிப்தின் இராணுவ அமைச்சர் ஜெனரல் அப்துல் பாட்டாஹ் அல் சிசி ஊடகத்தில், "அதிபர் முர்சியை இராணுவம் பதவிலிருந்து நீக்குவதாகவும் அவர் மக்களின் ஆசைகளை பூர்த்தி செய்ய தவறிவிட்டார்" என்றும் அறிவிக்கிறார்.

முர்சி எந்த ஆசையை பூர்த்தி செய்யவில்லை? அவர் ஆட்சிக்கு வந்தவுடன் இரவு களியாட்ட விடுதிகளை மூடினார்; மக்களுக்குத் தீமை பயக்கும் பல சமூகவிரோத விடயங்களை ஒழித்தார்.

இதில் வினோதம் என்னவென்றால், படைத்தளபதியாக இருந்த சிசியை முர்சி, சுப்ரீம் படைத்தளபதியாக பதவி உயர்த்தியதோடு அவரை அதிகாரமிக்க பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி உயர்த்தினார். முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சார்ந்த உயர்மட்ட உறுப்பினர் ஒருவர் கூறுகிறார்: "அதிபர் முர்சி அவர்கள் பாட்டாஹ் சிசி அவர்களை மிகவும் ஆழமாக நம்பினார்."

இராணுவத்தால் தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டுள்ள அட்லி மன்சூருக்கு மக்கள் மத்தியிலிருக்கும் பிரபல்யம் பற்றி அல் ஜசீரா கூறுகையில், "தற்போது போராட்டம் நடக்கும் இடத்திற்கு அட்லி மன்சூர் நடந்து போனால், எந்த ஆபத்தும் இல்லாமல் அவர் திரும்பி வரலாம். ஏனென்றால் மக்களுக்கு அவரை தெரியாது."
இத்தனைக்கும் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அதிபர் முர்சியினால் உச்ச அரசியலமைப்பு நீதிமன்றத் தலைவராக அட்லி மன்சூர் நியமிக்கப்பட்டார். இப்படி அதிபர் முர்சி அவர்களின் அதி நம்பிக்கையை வென்ற இவர்கள், எப்படி குறுகிய காலப்பகுதிக்குள் அவருக்கு எதிரிகளாக மாறினார்கள்? இதிலிருந்து , எகிப்து சகோதரத்துவ கட்சியின் ஆட்சிக்கு எதிராக திட்டமிட்டு செயற்பட்டு இருக்கிறார்கள் என்பது புரியவருகின்றது. முஹம்மட் எல்பராதி (ElBaradei) என்பவரை உதவி அதிபராக நியமித்து இருப்பது, இச்சதியின் பின்னணியில் அமெரிக்கா இருக்கின்றது என்பதற்கான மற்றொரு சான்றாகும்.

வாஷிங்டனில் கடந்த டிசம்பரில் அதிபர் முர்சியின் ஆலோசகர் இஸாம் அல் ஹட்டாத் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்களை சந்தித்த போது, "எதிர்தரப்பு கட்சிகளையும் நிர்வாகத்துக்குள் உள்வங்குமாறு ஒபாமா வாதாடினார்" என்றும் மாநில செயலாளர் ஜான் கெர்ரி, "எகிப்தின் பிரதம மந்திரியாக முன்னாள் சர்வதேச அணுசக்தி தலைவர் முஹம்மமட் எல் பராதியை நியமிக்க" வற்புறுத்தினார் என்றும் ஆனால் அது அதிபர் முர்சியினால் நிராகரிக்கப்பட்டது என்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது.

இவை எல்லாவற்றையும் பார்க்கும்போதும் வளைகுடா நாடுகளில் மக்கள் தேர்வு செய்யும் ஒரு ஜனநாயக அடிப்படையிலான இஸ்லாமிய ஆட்சி வருவதை அமெரிக்கா விரும்பவில்லை என்பதும் இதற்கு மத்திய வளைகுடா முஸ்லிம் நாடுகளும் உடந்தை என்பதும் தெளிவாக விளங்குகின்றது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அதிபர் முர்சியினை இராணுவம் அடாவடியாக நீக்கியச் செயலை, மக்களால் தேர்வு செய்யப்படாத இஸ்லாத்துக்கு எதிரான மன்னராட்சியினைக் கொண்டிருக்கும் சவூதி மன்னர் வரவேற்றச் செயல் இதற்கு கட்டியம் கூறுகிறது.

ஆனால் ஒன்றும் மட்டும் உண்மை; மத்திய அரபுலக மக்கள் விழிப்புணர்வு பெற்று வருகின்றார்கள். அவர்களை இனிமேலும் ஏமாற்றி, அமெரிக்காவுக்கு வாலாட்டும் பொம்மைகளாக அந்த நாடுகளை நீண்டநாட்களுக்குக் கொண்டு செல்ல முடியாது. அங்கு விரைவிலேயே மக்கள் எழுச்சி முழு அளவில் நடக்கும். அது, மக்களால் தேர்வு செய்யப்படும் சர்வாதிகாரமற்ற, அமெரிக்காவுக்கு வாலாட்டாத மக்கள் குடியரசு ஏற்பட வழிவகுக்கும்! இது உறுதி!

Related

முக்கியமானவை 8650984195679822914

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item