எகிப்தில் நடப்பது புரட்சியா ?

முஹம்மது முர்ஷி ஜனநாயக ரீதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் இன்று இராணுவ அதிகாரங்களால் தூக்கி எறியப்பட்டு வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எகிப்திய அதிகாரத்தை நேற்று இரவு அந்நாட்டின் இராணுவம் தனதாக்கி கொண்டது.

தேர்தல் நடந்து மாதங்களே ஆகியிருக்கும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாத்தை முதன்மையாக கொண்டு செயல்படும் "முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்(FREEDOM & JUSTICE PARTY" ஆட்சி கட்டிலில் வந்து அமர்ந்ததுமே அதனை சிறிதும் சகித்து கொள்ள முடியாமல் போன நாடுகள் இரண்டு.
எந்த நாடுகள் அவை என்கிறீர்களா ?

அது அமேரிக்கா மற்றும் இஸ்ரேலை தவிர வேறு எந்த நாடாக இருக்க முடியும் ?

இந்த இரு நாடுகளின் கை குழந்தையாக இருந்த ஹோஸ்னி முபாரக், நாற்பது ஆண்டுகால சர்வதிகார ஆட்சியில் இருந்து விரட்டப்பட்ட போது சோகத்தின் உச்சியில் இருந்தவர்கள் இவர்கள் மட்டுமே. 1967 அம்ம ஆண்டு நடந்த அரபு - இஸ்ரேலிய யுத்தத்திற்கு பிறகு அனைத்து அரபு நாடுகளும் தங்களது உறவை இஸ்ரேலுடன் முறித்து கொண்டது. ஆனால் எகிப்து மற்றும் ஜோர்டான் மட்டும் தங்களது உறவை தொடர்ந்தனர்.

ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் எகிப்திய ஜனாதிபதி முஹம்மது முற்சி அவர்களை எதிர்த்து அனைத்து நரித்தன வேலைகளையும் தன் நாட்டின் உளவுத்துறை மூலமாக மேற்கொண்ட இந்த இரண்டு நாடுகளும் இன்று புன்னகையின் உச்சத்தில்.

இனி காஸா மக்களை போட்டி போட்டு கொண்டு குண்டு மழை பொழிந்து கொள்ளலாம், அப்பாவி பாலஸ்தீன மக்களை சிறை பிடிக்கலாம், நிலங்களை அபகரிக்கலாம், நினைத்த நொடி பொழுதே ஹமாஸ் இயக்கத்தின் மீது போர் தொடுக்கலாம், கேட்பதற்கு இனி நாதி கிடையாது. இனி வேறு ஒரு நபர் எதிர்கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டால் ரபா (Rafa) crossing (எகிப்து - காஸா எல்லைகள்) கண்டிப்பாக மூடப்படும்.

மீடியாக்கள் போட்டி போட்டு கொண்டு தஹ்ரீர் சதுக்கத்தை கூடியிருக்கும் எதிர்பாளர்களை காட்டிய அளவில் முஹம்மது முர்ஷி அவர்களுக்கு ஆதரவாக லிபர்ட்டி சதுக்கத்தில் கூடியிருந்த அதிகமான மக்களை ஒரு நாளும் காட்டவில்லை. நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டிய அரபு மீடியாக்கள் மேலை நாட்டு முதலாளிகளுக்கு பீ பீ ஊதியது மிக நன்றாக தெரிந்தது. தஹ்ரீர் சதுக்கத்தில் கூடியிருந்த எதிர்பாளர்களை 2 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து படமாக்கிய அல்-ஜசீரா, லிபர்ட்டி சதுக்கத்தில் கூடியிருந்தவர்களை மிக அருகில் சென்று படமாக்கியது பாரபட்சத்தின் உச்சகட்டம்.

இப்போது நடப்பது புரட்சி அல்ல. இது, வெளி நாடுகளால் தூண்டி விடப்பட்ட கலவரம் மட்டுமே. தயவு செய்து மக்கள் ஹோஸ்னி முபாரக் சர்வாதிகாரிக்கு எதிராக நடந்த போராட்டங்களையும், இப்போது நடக்கும் கலவரத்தையும் ஒன்றாக பார்த்திட வேண்டாம்.

அன்று நடந்தது புரட்சி, இன்று நடப்பது சூழ்ச்சி.

அதிபர் முர்சி அவர்களுக்கு ஆதரவாக திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் புகைப்படம் இங்கு உள்ளது.

எகிப்தில் மறுபடியும் இவர்கள் ஆட்சி அமைத்திட வல்ல இறைவனை வேண்டிடுவோம்.
மரியாதைக்குரிய முர்சியோடு துணை நிற்பதற்கு வல்ல ரஹ்மான் போதுமானவன்.

தமிமுல் அன்சாரி.

Related

முக்கியமானவை 5126950646609525158

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item