சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி

இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக அனைத்து முஸ்லிம் சமுதாய அமைப்புகளின் தலைவர்களையும் ஒருங்கிணைத்து இஃப்தார் நிகழ்ச்சி கடந்த 21.7.2013 அன்று சென்னையில் உள்ள ராயல் ரெஜென்சி ஹோட்டலில் வைத்து நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினரும் விடியல் வெள்ளி ஆசிரியருமான A.இஸ்மாயில், பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் A.S.இஸ்மாயில், மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது, மாநில செயலாளர் அன்சாரி, சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி, அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர் தொண்டு ஹனிபா, அஹமது முனிர் மாநில துணைத்தலைவர் இந்திய தவ்ஹித் ஜமாத், மெளலான மன்சுர் காசிஃபி மாநில பொதுச்செயலாளர் ஜம்யிய்யதுல் உலமா ஹிந்த், ஹிதாயத்துல்லாஹ் மாநில பொதுச் செயலாளர் இஸ்லாமிய இலக்கிய பேரவை, ASA உமர் ஃபாருக் மாநில தலைவர் மறுமலர்ச்சி முஸ்லிம் லீக், ஹாமித் பக்ரி மாநில தலைவர் இஸ்லாமிய ஜனநாயக பேரவை ஆகியோர் கலந்து கொண்டனர்









