இலங்கையில் மஸ்ஜிதை திறக்கவிடாமல் தடுக்கும் புத்த தீவிரவாதிகள்!

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறைகளை தூண்டியும், அவர்களின் வழிப்பாட்டுத்தலங்கள் மட்டும் கலாச்சாரத்திற்கு எதிராக தேவையற்ற எதிர்ப்புகளை உருவாக்கியும் இடையூறுகளைச் செய்துவருகின்றனர் புத்த தீவிரவாதக்குழுக்கள். இந்நிலையில் இலங்கையில் தலைநகர் கொழும்பில் கிராண்ட்பாஸ் பகுதியில் பழைய மஸ்ஜிதுக்கு பதிலாகபுதிதாகக் கட்டப்பட்டுள்ள மஸ்ஜிதை  திறக்கவிடாது புத்த தீவிரவாத பிக்குகள் தலைமையிலான கும்பல்  இடையூறுகள் ஏற்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை புத்த பிக்கு தலைமையிலான தீவிரவாதக் குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி தொழுகைகளை நடத்தவி்டாது தடுத்ததாகவும் பின்னர், மீண்டும் இருதரப்பு கூட்டம் நடத்தி முடியும்வரை பழைய மஸ்ஜிதிலேயே தொழுகைகளை நடத்துமாறு போலீசாரினால் உத்தரவிடப்பட்டதாகவும் மேல்மாகாண சபை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கூறுகிறார்.

பிரதமரின் பொறுப்பிலுள்ள புத்த சாசனம் மற்றும் மத விவகாரங்களுக்கான அமைச்சின் அனுமதியை பெற்றே இந்தப் பள்ளிவாசல் அமைக்கப்பட்டதாக முஜிபூர் ரஹ்மான் மேலும் கூறினார்.இந்தப் பிரச்சனை தொடர்பில் புத்த சாசன அமைச்சின் அனுமதியுடன் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

அனுராதபுரம், தம்புள்ளை, பலாங்கொடை உள்ளிட்ட பல இடங்களில் மஸ்ஜிதுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் சில கடும்போக்கு புத்த தீவிரவாத அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

Related

முக்கியமானவை 4810251101296402206

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item