மதுரா தொடர் குண்டுவெடிப்பு: விசுவஹிந்து பரிஷத் தலைவர் கைது!

உத்தர பிரதேசம் மாநிலம் மதுரா கோஸிகலான் பகுதியில் கடந்த மாதம் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக  விசுவஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவர் ஜக்தீஷ் ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கோஸிகலானில் கடந்த மே மாதம் 30-ஆம் தேதி நான்கு குண்டுகள் வெடித்தன. இச்சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. எனினும் இப்பகுதியில் வாழும் மக்களை பீதிவயப்படுத்துவதே இக்குண்டுவெடிப்புகளின் நோக்கம் என்று இண்டலிஜன்ஸ் யூனிட் கூறுகிறது.

குண்டுவெடிப்பு நிகழ்வதற்கு சற்று முன்பு ஜக்தீஷ் ஆனந்த் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்தார் என்பதை நிரூபிக்கும் சி.சி.டி.வி டி.வி காட்சி பதிவுகள் உள்ளன.

குண்டுவெடிப்பை நிகழ்த்தி அப்பகுதியில் அமைதியான சூழலை சீர்குலைப்பதே ஹிந்துத்துவாவினரின் நோக்கம் என்று மதுரை துணை எஸ்.பி ராஜேஷ்குமார் சிங் ரத்தோர் கூறுகிறார்.

கடந்த ஆண்டு கோஸிகலானில் நிகழ்ந்த வகுப்புவாத கலவரத்தின் பின்னணியில் வி.ஹெச்.பி இருப்பதாக கூறும் முஸ்லிம் தலைவர்களின் குற்றச்சாட்டை நிரூபிப்பதாக ஜக்தீஷ் ஆனந்தின் கைது அமைந்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த கோஸிகலான் கலவரத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

முக்கியமானவை 450646624455061581

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item