SDPI, - PFI, பதிவு செய்யப்பட்ட அமைப்புகள்: நிர்வாகிகள் விளக்கம்

http://koothanallurmuslims.blogspot.com/2010/07/sdpi-pfi.html

எஸ்.டி.பி.ஐ., தமிழக தலைவர் தெஹ்லான் பாகவி கூறியிருப்பதாவது: "சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ.,) என்பது, பதிவு செய்யப்பட்டு,நாடு முழுவதும் செயல்பட்டு வரும் தேசிய அரசியல் கட்சியாகும். எங்கள் அமைப்பு, 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில், மாநில கட்டமைப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடனும் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. மக்கள் பிரச்னைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எஸ்.டி.பி.ஐ., அரசியல் கட்சியை, தடை செய்யப்பட்ட இயக்கம் என்று குறிப்பிட்டு இருப்பது வருத்தத்துக்குரியது. இவ்வாறு தெஹ்லான் பாகவி கூறியுள்ளார். எஸ்.டி.பி.ஐ., பொதுச்செயலர் முபாரக்கும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.
"பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பின் தமிழக தலைவர் முகமது அலி ஜின்னா கூறியிருப்பதாவது: "தடை செய்யப்பட்ட இயக்கமான பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா...' என குறிப்பிட்டுள்ளது, முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. நாங்கள் இதை வன்மையாக கண்டிக்கிறோம். "பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல; முறைப்படி பதிவு செய்யப்பட்டு, ஜனநாயக நடைமுறைகளுக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் உட்பட்டு ஜாதி, மத பேதமின்றி அனைத்து மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தேசிய அளவில் செயல்பட்டு வரும் சமூக நல இயக்கம். இவ்வாறு முகமது அலி ஜின்னா கூறியுள்ளார்.
Koothanallur Muslims