PFI-ன் சுதந்திர தின பேரணியைத் தடுப்போம்- பி.ஜே.பி. கொக்கரிப்பு
http://koothanallurmuslims.blogspot.com/2010/07/pfi_20.html
திருவனந்தபுரம்:'வாருங்கள் சுதந்திரத்தின் காவலர்களாக!' என்ற முழக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்-15 அன்று சுதந்திர தின அணிவகுப்புகளை நடத்தி வருகின்றது பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா.
அதனடிப்படையில் இந்த ஆண்டு கேரளாவில் சுதந்திர தினத்தன்று 7 இடங்களில் பேரணி நடத்த பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா ஏற்பாடு செய்துள்ளது.
இந்த பேரணிகளை கேரள அரசு தடை செய்யாவிட்டால் தாங்கள் அதனை நடத்த விடாமல் செய்வோம் என பி.ஜே.பி-யின் கேரளத் தலைவர் முரளிதரன் எச்சரித்துள்ளார்.
பாப்புலர் ஃபிரண்டைச் சார்ந்தவர்களை நாட்டுப்பற்றுள்ள குடிமகன்கள் என கிண்டலாக அவர் சுட்டிக் காட்டினார்.
கேரளாவில் சில இடங்களில் தடை செய்து விட்டு மற்ற இடங்களில் சுதந்திரமாக நடத்துவதற்கு கேரள அரசு அனுமதித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.எர்ணாகுளத்தில் இந்தப் பேரணியை நடத்தக்கூடாது என எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Koothanallur Muslims
Popular Front Of India