நேட்டோவின் கல்லறைகளாக மாறும் ஆஃப்கன்

ஆஃப்கனில் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் தளபதிகள் மீதான தாக்குதல்,வியட்நாம் மீதான அமெரிக்காவின் பழியை ஆஃப்கனின் சாபம் தீர்ப்பதைப் போல உள்ளது.

அமெரிக்காவின் இந்த ஏகாதிபத்திய போர் வியட்நாமையும் தாண்டிவிட்டது. ஆஃப்கனின் சாபம் இதற்கு முன்னர் டேவிட் மெக்கியர்னன், மெக்கிறிஸ்டலை விழுங்கியது போல இப்போது இருக்கும் தளபதி டேவிட் பெட்ரேயசையும் விழுங்கும்.

அக்டோபர் 2009.ல்,முன்னால் கனடிய மூத்த பாதுகாப்பு அதிகாரி ரிக் ஹில்லர் கூறியது போல்,"நேட்டோ அழுகிக் கொண்டிருக்கும் பிரேதத்தின் நிலையை அடைந்துவிட்டதை ஆஃப்கன் வெளிப்படுத்தியிருக்கிறது."

கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நேட்டோவில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில்,ரஷ்யா மற்றும் பிரிட்டன் 19-ஆம் நூற்றாண்டுகளில் பெற்ற பாடத்தைப் பார்த்து, மேற்கத்திய நாடுகள் கற்றுக் கொள்ள தவறிவிட்டது என்று ஆஃப்கனில் ஆறாத துயர் பெற்ற ரஷ்ய தளபதி நகைக்கிறார்.

கர்சாய் தனது நட்பு நாட்டின் தாக்குதலைப் பார்த்து புலம்புகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக முன்னால் தளபதி மெக்கிறிஸ்டல் அமைதியையும் பாதுகாப்பையும் வாக்களித்து,முஸ்லிம் மக்களின் துன்பத்தையும் ரத்தத்தையும் கொண்டு இலாபம் தேடிக்கொண்டார்.

முஸ்லிம் நாடுகளான ஜோர்டான், துருக்கி உள்பட 42 நாடுகளின் கூட்டணி, 140,000 சக்தி வாய்ந்த சர்வதேச படைகள், நேட்டோவின் படையில் புதிதாக சேர்க்கப்படும் வீரர்கள் இவ்வளவும் சேர்ந்தும் தலிபான்களின் எதிர் தாக்குதலால் ஆஃப்கன் மீதான வெற்றியை முடியாத காரியமாக்கிவிட்டது.

Koothanallur Muslims

Related

Taliban 194301213351029643

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item