‘Headlines Today’ அலுவலகம் தாக்கப்பட்டதற்கு பாப்புலர் ஃபிரண்ட் கடும் கண்டனம். ஆர்.எஸ்.எஸ்ஸின் தீவிரவாதத்தை விசாரிக்கவும் கோரிக்கை

பெங்களூர்:கடந்த சில தினங்களுக்கு முன், டெல்லியில் ஹெட்லைன்ஸ் டூடே தொலைகாட்சியின் அலுவலகத்தை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் தாக்கினர். இந்த பயங்கரவாத செயலுக்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இவ்வெறித்தனமான செயல்களின் மூலம்,ஆர்.எஸ்.எஸ். ஜனநாயகத்தையோ அல்லது அரசியல் சாசனத்தையோ மதிக்காததை உறுதி செய்துள்ளது.

அதே சமயத்தில், சங்க்பரிவார தீவிரவாத நடவடிக்கைகளை தைரியமாக ஒளிபரப்பிய ‘Headlines Today’ தொலைக்காட்சிக்கு நன்றி பாராட்டுவதாகவும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சங்க்பரிவார குடும்பங்கள் பல தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளது தெளிவாக தெரிந்தும், மீடியாக்கள் மற்றும் பாதுகாப்பு பாசறைகள் இதை புறக்கணிப்பதாகவும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

நந்தித்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் குண்டுவெடிப்பு, மலேகோன் குண்டுவெடிப்புகள், கான்பூரில் பஜ்ரங்க்தள் நிர்வாகி வீட்டில் குண்டுவெடிப்பு, தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டுவெடிப்பு, கோவா குண்டுவெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு,அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு என பல குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவ பங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டுள்ளது தெளிவாக தெரிந்தும், அவர்கள் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.

ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்புகள் கண்கானிப்பில் இருந்திருந்தால், இது போன்ற சம்பவங்கள் தடுக்கப்பட்டிருக்கும் என்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் ஷர்மா, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் ராமச்சந்திர கல்சங்கரா மற்றும் சந்தீப் டாங்கே ஆகிய ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் இத்தேச துரோக சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.

‘Headlines Today’ ஒளிபரப்பிய வீடியோவில், இந்திய துணை ஜனாதிபதியை கொள்ள சதி செய்தது, அஜ்மீர் மற்றும் மக்கா மஸ்ஜித் குற்றவாளிகளை நம்பிக்கைக்குரிய வழிகாட்டி என்று ஆர்.எஸ்.எஸ். கூறியது, முஸ்லிம்களைக் கொள்ள பி.ஜே.பி. தலைவர்கள் சதித் திட்டம் தீட்டியது, ஆர்.எஸ்.எஸ். தலைமை நிர்வாகி இந்த்ரேஷ் குமார் குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டது ஆகியவற்றை தெளிவாக்கின.

இச்சம்பவங்கள் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்புகளில் ஒளிந்திருக்கும் மறைமுக கொள்கைகளையும், குறிக்கோள்களையும் தெளிவாக காட்டுவதாக பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.

இந்தியா முழுவதும் பரவிக்கிடக்கும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதம் இந்திய பாதுகாப்பிற்கு பெரும் சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் அமைத்துள்ளதாக கூறியுள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, இதை இரும்புக் கரம் கொண்டு மத்திய அரசு அடக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத நடவடிக்கைகளை அரசியல் அளவில் விசாரிப்பதற்காக அக்கறை காட்டாதவும் மற்றொரு இழுக்காக அமைந்துள்ளது.

இவ்வளவு பெரிய ஆதாரங்கள் வெளிவந்த நிலையிலும்,காவி பயங்கரவாதத்தை ஒடுக்க எந்த வித நடவடிக்கையினையும் மத்திய அரசு எடுக்கைவில்லை என்பதாக பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

1993 க்குப் பிறகு நடந்த அனைத்து குண்டுவெடிப்பு சம்பவங்களையும் மத்திய அரசு மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா கோரியுள்ளது.

Koothanallur Muslims

Related

SDPI 8506839477668390089

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item