ஒடுக்கப்பட்டோர்களை சக்திப்படுத்தும் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறும் – PFI தலைவர் இ.எம்.அப்துர் ரஹ்மான்

பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் .எம்.அப்துர் ரஹ்மான் கேரள போலீசார் மேற்கொண்டு வரும் ஜனநாயக விரோதபோக்கையும்,பாரபட்சத்தையும் வன்மையாக கண்டித்துள்ளார்.

இது சம்பந்தமாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,ஒரு அமைப்பின் தலைமை அலுவலகத்தை ஒரு சிறிய உள்ளூர் சம்பவத்திற்காக சோதனையிடுவது, மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பறிப்பது மட்டுமல்லாது,அவ்வமைப்பின் சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கும் செயலாகும் என்றார்.இத்தகைய கொள்கையைத்தான் கொண்டுள்ளதா என்பதை அரசு விளக்க வேண்டும் என்று கூறினார்.

ஒரு உள்ளூர் சம்பவத்தினை நேர்த்தியாக விசாரிப்பதை விட்டுவிட்டு பெரும் பீதியை ஏற்படுத்தி பாப்புலர் ஃப்ரண்ட்டின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காகவும், மேலும் முஸ்லீம் இளைஞர்கள் மீது மீடியாக்களின் மூலம் அவதூறுகளை பரப்பி வெறுப்புணர்வை ஏற்படுத்துவதற்க்காகவும் முயற்சி செயல் என்றும் தெரிவித்தார்.

இந்த பிரச்சினையில் கேரள போலிசார் பல இடங்களில் குற்றம் சுமத்தப்பட்டவர்களை கைது செய்யப்படுவதற்கான உச்சநீதிமன்ற விதிகளை வெளிப்படையாகவே மீறி உள்ளனர். போலீஸ் நிர்வாகத்திலுள்ள சில மதவாத மற்றும் முஸ்லீம் விரோத சக்திகள் இவ்விசாரனையில் ஆதிக்கம் செலுத்தி வருவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று இ.எம்.அப்ற் ரஹ்மான் தெரிவித்தார்.

பல இடங்களில் மனித உரிமை மீறல்கள் வெளிப்படையாகவே மீறப்பட்டுள்ளன. மேலும், வருகின்ற தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, மத நல்லிணக்கத்தை தன் சுய இலாபத்திற்காக சீர்குலைக்கும் கீழ்தரமான அரசியலை மேற்கொள்வதாக குற்றம் சாட்டினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் இப்பிரச்சினையை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ளும் என்று தெரிவித்தார்.

நபிகளாரை இழிவாக சித்தரிக்கும் கேள்வித்தாளை தயாரித்த பேராசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்தில்,பாப்புலர் ஃப்ரண்ட்க்கு எந்த தொடர்பும் இல்லை என்பதனை ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், ஒரு வேலை தங்கள் அமைப்பினர் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களுக்கெதிராக கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கையை அமைப்பு மேற்கொள்ளும் என்றார்.

இவ்வழக்கு விசாரணையில்,எங்கள் மாநிலத் தலைவர்கள் ஆரம்பத்திலே அதிகாரிகளிடம் நல்ல ஒத்துழைப்பை அளிப்பதாக கூறியிருந்தார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

குற்றவாளிகளை தேடுவதில் கவனம் செலுத்தாமல்,தற்போது கேரள போலிசார் வேண்டுமென்றே பிரிவினைவாத செயல்களிலும் இயக்கத்தை குறி வைக்கும் செயல்களிலும் ஈடுபட்டுள்ளார்கள். ஆளும் கட்சி நலனிற்காக காவல்துறை அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக கூறினார்.

நபிகளாரை இழிவாக சித்தரித்தப்பட்ட வழக்கின் விசாரனை தற்போது ஒரு இயக்கத்தை குறிவைக்கும் விசாரனையாக எவ்வாறு மாறியது என்று விளக்கம் தேவைப்படுகிறது.

கேரள போலிசார் தற்போது காட்டிவரும் அக்கறையையும், கடும்முயற்சியின் ஒரு சிறு பகுதியை கண்ணூர் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள சி.பி.எம் மற்றும் பி.ஜே.பி. பயிற்சி பாசறைகளில் செலுத்தியிருந்தால்,கேரளாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் பெருமளவில் முடிவிற்கு வந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் கேரள மாநிலத்தில் நடந்த அனைத்து குற்றங்களிலும் எந்த கட்சியினர் அதிகமான குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதை கணக்கெடுக்க அரசு தயாரா என்று சவால் விடுத்தார். அப்படி ஒரு கணக்கெடுப்பு நடத்தினால் சி.பி.எம். மற்றும் பி.ஜே.பியைத் தோற்கடிக்க எவரும் இருக்க முடியாது என்று உறுதியாகத் தெரிவித்தார்.

இது போன்ற அடக்குமுறைகளின் மூலம் பாப்புலர் ஃப்ரண்டிற்கு உள்ள பெரும் மக்கள் செல்வாக்கையும், ஆதரவையும் ஒன்றும் செய்திட இயலாது. ஒடுக்கப்பட்டோரை சக்தி படுத்துவதற்கான பாப்புலர் ஃப்ரண்டின் அனைத்து செயல்பாடுகளும் தொடர்ந்து நடந்துவரும் என்று தேசிய தலைவர் இ.எம.அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

source:popularfrontindia.org

Related

SDPI 5073467464954065400

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item