தொண்டி அருகே 2 நாளாக கலவரம் - இரு பிரிவினரிடையே மோதல் - 500 பேர்கள் மீது வழக்கு

திருவாடானை, ஜூலை 12: திருவாடானை தாலுகா, தொண்டி அருகே நம்புதாளையில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 9 பேர் காயமடைந்தனர். இந்த மோதல் தொடர்பாக 500-க்கும் மேற்பட்டோர் மீது போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர போலீஸôர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொண்டி அருகே நம்புதாளை கிராமத்தில் வசிப்பவர் சத்தியசீலன் மகன் பழனி (21). தொண்டி ஓடாவி தெருவைச் சேர்ந்த அப்துல் ரஹீம் மகள் ஜெய்னப் என்ற பெண்ணை நம்புதாளையில் பழனி வீட்டின் எதிரில் வசிப்பவர் வீட்டில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். ஜெய்னப்-வின் தங்கை அடிக்கடி ஜெய்னப்பை பார்க்க வருவதாகத் தெரிய வருகிறது. இந் நிலையில், பழனிக்கு அந்தப் பெண்ணுடன் நட்பு ஏற்பட்டதாம்.

இந் நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஓர் ஆட்டோவில் அந்தப் பெண் பழனி வீட்டுக்கு வந்துள்ளார். இவரைத் தொடர்ந்து வந்த தொண்டியைச் சேர்ந்த இளைஞர்கள் பழனி வீட்டில் வைத்து அந்தப் பெண்ணைத் தாக்கினராம். அதைத் தடுத்த பழனி வீட்டாரையும் தாக்கி விட்டுச் சென்று விட்டனராம்.

தகவலறிந்த நம்புதாளை மீனவ இளைஞர்கள் சிலர், அந்த இளைஞர்கள் தொண்டி செல்வதற்குள் வழிமறித்துத் தாக்கியுள்ளனர். பின்னர் இரவு 7 மணி அளவில் ஒரு பிரிவைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நம்புதாளைக்கு வந்து கடைகளையும் இரண்டு சக்கர வாகனங்களையும் சேதப்படுத்தினர்.

இதில் இரு தரப்பையும் சேர்ந்த முகம்மது சிப்ரி, நவ்பர், அப்துல் ஹக், முகைதீன், நம்புதாளையைச் சேர்ந்த ரகுபதி, உதயகுமார், ராமலிங்கம், சந்திரன்,ஆகியோர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கலவரம் வராமல் தடுக்க போலீஸôர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக நம்புதாளையைச் சேர்ந்த சத்தியசீலன் அளித்த புகாரின் பேரில், சாதிக் பாட்சா உள்பட 500 பேர் மீதும், நம்புதாளை கிராமத் தலைவர் பெரியசாமி அளித்த புகாரின் பேரில் 50 பேர் மீதும், சாதிக் பாட்சா அளித்த புகாரின் பேரில் 10 பேர் மீதும் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து, ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பிரதீப்குமார் கூறுகையில், நம்புதாளையில் இரு பிரிவினரிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு மோதல் ஏற்பட்டுள்ளது. அதனை தடுக்கும் விதமாக போலீஸôர் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது. 4 குழுக்கள் அமைத்து விசாரித்து வருகிறோம் என்றார்.

பெற்றோர்களே! சகோதர சகோதரிகளே!

மார்க்கக்கல்வி குறைவும், நாகரீகம் என்ற பெயரில் இஸ்லாமிய கோட்பாடுகளை கடந்து, பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு அளவுக்குஅதிகமாக இடம் தருவதுமே இதைப்போன்ற அவலங்களுக்கு காரணமாகிறது. குடும்ப கவுரவம் படுகுழியில். இது போன்ற கேவலங்களில் சிக்கும்பெண்ணுக்கோ இனி துளி கூட வாழ்க்கை இல்லை. வாலிபம் வரை சுவர்க்கமாக கழிந்த அவளின் வாழ்க்கையில் , இனி ஒவ்வொரு பகலும்நரகமாகத்தான் விடியும். இதுவரை கண்ட 1000 கணவுகள் குப்பையில் விழுந்திட, எதிர்காலம் கேள்விக்குறியாகிட... இனி தொடர்வது என்னவாழ்க்கையா? உலகிலும் உறவுகளில் அவளுக்கு இடமில்லை, மருமையிலும் சுவர்க்கத்தில் அவளுக்கு இடமில்லை. இறைவனை மறந்து தன்ஆசைகளுக்கு அடிபனிந்த அவளை, இனி நரகம் தான் நினைவுகூரும்.

பெற்றோர்கள் தம் பிள்ளைகளின் மனதில் இறைவனின் அச்சத்தை கொண்டுவர வேண்டும். நம் பிள்ளையை ஸ்கூலுக்கு / கல்லூரிக்கு ரெடி பன்னிவிட்டோமா, வேனில் ஏத்திவிட்டோமா என்று இல்லாமல், அவளின் செயல்களை கவனிக்கவேண்டும். மார்க்க கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும். ஏனோ தானோஎன்று வளர்க்காமல், நாம் ஒவ்வொருவரும் மரணிக்கக்கூடியவர்கள், மரணத்துக்கு பிறகு தான் அழிவில்லாத நிரந்தர வாழ்க்கை இருக்கிறது என்றுஅவர்களுக்கு உணர்த்த வேண்டும். அல்லாஹ்வின் அச்சம் மட்டும் மனதில் இருந்தால் எந்த பெண்னையும் எவராலும் வழிகெடுக்க முடியாது. நம் பிள்ளைகள்நம் கண் மூடும்வரை அழகாக வாழ்வதைக் காணத்தானே நாம் விரும்புகிறோம். அப்படியானால் இந்த சூழ்ச்சிகள் நிறைந்த உலகில் வாழ, உங்கள்பிள்ளைகளுக்கு நீங்கள் தான் பயிற்ச்சி தர வேண்டும். பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவையும் கண்கானிக்க வேண்டும். கல்வி அவசியம் தான் , ஆனால்பாதுகாப்பு தான் அவளின் வாழ்க்கை என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும். கல்வியின்றி வாழ்ந்துவிடலாம். கவுரவம் இன்றி வாழ முடியாது. பட்டப்படிப்புபடித்த சகோதரிகள் அனைவரும் சிறந்த குடும்பத்தில் மணம் முடித்து சிறப்பான வாழ்க்கை வாழ்ந்துவிடுவதும் இல்லை, சாதாரண படிப்பறிவை கொண்டசகோதரிகள் அனைவரும் வருமையான குடும்பத்தில் வாக்கப்படுவதும் இல்லை. அனைத்தையும் காட்டிலும் அழகானவள்: மார்க்கப்பற்றுள்ள சாலிஹானபெண்ணே! மார்க்க வழியில் வாழும் பெண்ணுக்கே அல்லாஹ்வின் உதவியும் கிடைக்கும். கற்க்கும் கல்வி அவளை மேம்படுத்த உதவுமே தவிர, அதுவேவாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடியது இல்லை. ஒரு பெண்ணின் எந்த முயற்ச்சியும் இஸ்லாத்தின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டதாக இருக்கவேண்டும். அதைபொருத்து தான் அவளின் எதிர்காலம் அமையும்.

ஏக இறைவன் அல்லாஹ் நம்மையும் நம் சகோதரிகளையும் அவனுக்கு பொருத்தமான வழியில் வாழ வைத்து, முஸ்லீமாக மரணிக்கச்செய்து,நாளை அவனை சந்திக்கும் தகுதியை தருவானாக ஆமீன்.

Source : knr web
Koothanallur Muslims

Related

RSS 2707377176204436301

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item