R.S.S பயங்கரவாத அமைப்பின் தீவிரவாத செயல்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுவிட்டது- திக் விஜய் சிங்

புதுடெல்லி:ஆர்.எஸ்.எஸ்.,பயங்கரவாத அமைப்பின் தீவிரவாத செயல்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் கூறியுள்ளார்.

காவிக் கூட்டத்தின் காலித்தனத்தையும் தீவிரவாத செயல்களில் சம்மந்தப்பட்டிருப்பதையும் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

"நாட்டில் நடந்த பல குண்டுவெடிப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் கிளை அமைப்புகளான விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், ராம் சேனா ஆகியவற்றுக்கும் தொடர்பு உள்ளதென கடந்த 8 ஆண்டுகளாக கூறிக்கொண்டிருக்கிறேன். கடைசியாக மக்கள் அதை கவனிக்க ஆரம்பித்தது மகிழ்ச்சியாக உள்ளது." என்றும் கூறினார்.

"தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பினர் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிஜேபி மீதான குற்றச்சாட்டுகள் தெளிவாகியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பே அதன் தலைவர் இந்திரேஷுக்கும், ஐ.எஸ்.ஐ.க்கும் உள்ள தொடர்பை ஒப்புக்கொண்டுள்ளது.அவருக்கும் மாலேகோன் வழக்கில் கைதாகியிருக்கும் பயங்கரவாதிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.இந்த விசாரணை மத்திய புலனாய்வு துறையும் மாநில அமைப்பும் சேர்ந்து உள்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் செய்யவேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத தலைவர் அஷோக் வர்ஷினி, அஷோக் பெர்ரி ஆகியோருக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது." என்றும் சிங் கூறினார்.

"அவர்கள் ஆணிகளான பைப்பை பயன்படுத்தி பின்னர் மொபைல் மூலம் வெடிக்கச் செய்கின்றனர்." இது குண்டு தயாரிப்பில் அவர்களின் நிபுணத்துவத்தையே காட்டுகிறது. இதே போன்ற கருவியே டிசம்பர் 2002 ல் போபாலில் பயன்படுத்தப்ப்டடது. 1992 நீமுச், 2006 நந்தித், 2008 கான்பூர் குண்டுவெடிப்புகளைப் போலவே செய்ததால் தான், சுனில் ஜோஷி கொல்லப்பட்டான்." என்றார் திக்விஜய்சிங்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் பேசுகையில்; "ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத தலைவர்களுக்கு தீவிரவாத செயல்களுடன் தொடர்பு இருப்பது பற்றி பாஜக தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்." என்று கூறினார்.

Koothanallur Muslims

Related

RSS 2080658059360980103

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item