போலி என்கவுண்டர் வழக்கில் நரேந்திர மோடியை விசாரிக்க சிபிஐ முடிவு

http://koothanallurmuslims.blogspot.com/2010/07/blog-post_31.html

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கடந்த 2005ம் ஆண்டு போலீஸ் என்கவுண்டரில் சோராபுதீன் என்பவரும், அவர் மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் சோரா புதீன் போலி என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டது தெரிய வந்தது.
குஜராத் மாநிலத்தில் உள்துறை இணை மந்திரியாக இருந்த அமீத்ஷா உத்தரவின் பேரில் இந்த போலி என்கவுண்டர் நடந்ததாக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து மந்திரி பதவியில் இருந்து விலகிய அமீத்ஷா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரி டம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
ஏற்கனவே இந்த வழக்கில் 15 போலீஸ் அதிகாரிகள் கைதாகி சிறையில் உள்ளனர். அவர்களில் 2 பேர் அப்ரூவராகி உள்ளனர். இதன் மூலம் அமீத்ஷா மீதான கொலை, ஆள் கடத்தல், மிரட்டல், குற்றத்துக்கான ஆதாரத்தை அழித்தல், சதி திட்டம் தீட்டுதல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் உறுதிப் படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே அமீத்ஷா மீதான குற்றச்சாட்டுக்களை மேலும் ஆதாரப்பூர்வமாக்கு வதற்காக சி.பி.ஐ. மேலும் சிலரை விசாரிக்க தீர்மா னித்துள்ளது. குஜராத் மாநில முன்னாள் டி.ஜி.பி. பிசிபாண்டேயை விசாரிக்க சி.பி.ஐ. நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
பாண்டே, போலி என் கவுண்டர் விசாரணையில் குறுக்கீடு செய்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. எனவே பாண்டேயிடம் விசாரித்தால் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விசாரணை வளையத்துக்குள் குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியையும் கொண்டு வர சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாகி உள்ளனர்.
குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி மாநில உள்துறை பொறுப்பையும் வகித்து வருகிறார். போலி என்கவுண்டர் குறித்து விசாரித்த சி.ஐ.டி. பிரிவுத் தலைவர் ஜி.சி. ரெய்ஜெரை கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ந் தேதி வேறு இடத்துக்கு மாற்றி உத்தரவிட்டார். அந்த இட மாறுதல் உத்தரவில் நரேந்திர மோடி கையெழுத்திட்டுள்ளார்.
இந்த இட மாறுதல் உத்தரவு சந்தேகம் அளிக்கும் வகையில் உள்ளதாக சி.பி.ஐ. கருதுகிறது. எனவே இது தொடர்பாக நரேந்திர மோடியிடம் விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.
நரேந்திர மோடியை சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அழைக்க, நோட்டீஸ் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த நோட்டீசை அனுப்புவதற்கு டெல்லி மேலிடத்திடம் அனுமதி கேட்டு விட்டு குஜராத் சி.பி.ஐ. அதிகாரிகள் காத்தி ருக்கிறார்கள்.
சி.பி.ஐ. தலைமை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் மோடியிடமும் போலி என்கவுண்டர் தொடர்பாக விசாரணை நடைபெறும். சி.பி.ஐ.யின் இந்த நடவடிக்கைககள் பா.ஜ.க. தலைவர்களிடம் கடும் கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளன.
குஜராத் கலவரம் தொடர்பாக சி.பி.ஐ.யின் ஒரு சிறப்புப் பிரிவு, கடந்த மார்ச் மாதம் நரேந்திர மோடியை வரவழைத்து விசாரணை நடத்தியது. அப்போது 9 மணி நேரம் மோடியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரித்தனர். தற்போது போலி என் கவுண்டருக்காக மோடியை சி.பி.ஐ. குறி வைத்துள்ளது.
Koothanallur Website