பா.ஜ.க. குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தமுமுக ஆம்புலென்ஸ்

ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு இடையூறு செய்யக் கூடாது என்பது சர்வதேச விதியாகும். ஆனால், கற்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்து, அதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மதவெறி பயங்கரவாதிகளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில் தங்களது இருப்பை வெளிகாட்டுவதற்காக சமீபகாலமாக, இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வேண்டும் என்று தவறான அடிப்படையில் பாஜக போராட்டங்கள் நடத்தி வருகிறது. கடந்த ஜுலை 24 அன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பாஜகவினர் இதே

கோரிக்கைக்காக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது தமுமுகவின் ஆம்புலன்ஸுக்கு, பிரபல ஹனீபா மருத்துவமனையிலிருந்து ஒரு இந்து சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தினரிடமிருந்து தொலை பேசி அழைப்பு வந்திருக்கிறது. ஒரு நோயாளியை தஞ்சாவூருக்கு எடுத்து செல்ல வேண்டும்
என்றும், வேகமாக வருமாறு அதில் வேண்டியதால், தமுமுகவின் ஆம்புலன்ஸ் டிரைவர் தாஜுதீன் வேகமாக ஹனீபா மருத்துவமனையை நோக்கி திருப்பினார்.
வரும் வழியில், பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்ததால், அவர் வண்டியை மெல்ல இரண்டாவது கியரில் நகர்த்தியிருக்கிறார்.

அப்போது காவல் துறையும் கூட்டத்தை விலக்கி, ஆம்புலன்ஸ்
செல்ல வழி ஏற்படுத்தியுள்ளனர். பாஜக தலைவர் பொன். ராதா கிருஷ்ணன் தனது
தொண்டர்களிடம் ஆம்புலன்ஸுக்கு வழி விடுமாறு அறிவித்திருக்கிறார். எந்த விதி மீறலும் யாருக்கும் இடையூறு இல்லாமலும் ஹனீபா மருத்துவமனையை நோக்கி ஆம்புலன்ஸ் எடுத்துச் சென்றுவிட்டார்.

மருத்துவமனை வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு நோயாளியை பார்க்க டிரைவர் சென்று விட்டார். அதற்குள் சுமார் 30 பேர் கொண்ட பாஜக கும்பல் ஓடிவந்த வேகத்தில், ஆம்புலன்ஸை கட்டைகளால் உடைத்து, டிரைவரை கொலை வெறியுடன் தேடி உள்ளனர். டிரைவர் கிடைக்காததால், ஆம்புலன்ஸை புரட்டி பெட்ரோல் டேங்கை உடைத்து, வண்டியை துவம்சம் செய்ய, இதைப் பார்த்த பொதுமக்கள் சப்தம் போட, அதற்குள் ஓடிவந்த காவல் துறையினர் பாஜகவினர் மீது தடியடி நடத்தியதும், வன்முறை கும்பல் ஓடத் தொடங்கியது.
அதற்குள் பாஜகவினர் தங்களின் அயோக்கியத்தனத்தை மறைக்க, ஆம்புலன்ஸ் எங்கள் மீது மோதும் விதமாக வந்தது என வதந்திகளை பரப்பினர். ஏற்கனவே அங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாமிட்டு இருந்ததால், அவர் தலைமையிலான போலிசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். அதற்குள் பாஜகவினர் போலிஸ் வாகனங்களையும் உடைத்தனர்.
போலிசார் துரத்த தொடங்கியதும் பாஜகவினர் கொடிகளை
போட்டுவிட்டு, வேனில் கட்டியிருந்த கொடிகளை அவிழ்த்து விட்டு ஓடத் தொடங்கினர்.


தமுமுக ஆம்புலன்ஸ் உடைக்கப்பட்ட செய்தி அறிந்ததும் திருத்துறைப்பூண்டி நகர தமுமுகவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மாவட்ட தலைவர் தாஜுதீன், ஒன்றிய செயலாளர் கலிபுல்லாஹ், யூசுப் உள்ளிட்டோர் தலைமையில் சாலை மறியலில் தமுமுகவினர் இறங்க, பிறகு வழக்கு தொடுத்து
விட்டு அடுத்தகட்டமாக போராட்டம் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.
செய்தியறிந்து திருவாரூர் மாவட்ட தமுமுகவினர் திருத்துறைப்பூண்டி நோக்கி விரைந்தனர். திருத்துறைப்பூண்டி நகரெங்கும் பாஜகவினரை பொதுமக்கள் காரிதுப்பாத குறையாக திட்டிக்கொண்டிருந்தனர்.

இதே, ஆம்புலன்ஸை பலமுறை பாஜகவினர் அவசரத்துக்கு பயன்படுத்தியது திருத்துறைப் பூண்டி மக்களுக்கு நன்கு தெரியும். அப்போது கூட ஒரு இந்து சமுதாய குடும்பத்துக்குத்தான் உதவ அந்த ஆம்புலன்ஸ் சென்றதும். திருத்துறைப்பூண்டி மக்களால் மூலைக்கு மூலை பேசப்பட்டது. காவல்துறை பாஜகவினரை பிடிக்க வேண்டும் என பொது மக்கள் தரப்பிலிருந்தே அழுத்தங்களும் அதிகரிக்க, அனைத்துக் கட்சியினரும் இந்த அராஜகத்தை
கண்டித்து, தமுமுகவினருக்கு ஆறுதலையும் ஆதரவையும் தெரிவித்தனர்.
அடுத்த நாள் மமக துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, திருத்துறைப்பூண்டிக்கு வந்து நிலைமைகளை நேரில் விசாரித்தார்.
குற்றவாளிகள் பிடிக்கப்படாததை கண்டித்து திருவாரூரில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் நோக்கி கருப்புக்கொடி ஊர்வலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. டி.ஐ.ஜி. அவர்களும் பொதுச் செயலாளர் ஹைதர் அலியிடமும், மற்ற அதிகாரிகள் மமக துணைப் பொதுச்செயலாளர் எம். தமிமுன்
அன்சாரியிடமும் பேசினார்கள். முதல்வர் கருணாநிதி திருவாரூக்கு வரும் தினத்தில் கருப்புக் கொடி ஊர்வலம் நடத்தாதீர்கள் என்றும், ஜுலை 30க்குள் குற்றவாளிகளை பிடிக்கிறோம் என்று கூறியதால், ஜுலை 31 அன்று கருப்புக் கொடி ஊர்வலம் ஒத்திவைக்கப்பட்டது. ஈவு, இரக்கமற்ற பாஜக வன்முறை கும்பலின் செயல் பொதுமக்களையே கோபப்படுத்தியது எனில், தமுமுகவினரை
தமிழகமெங்கும் கொந்தளிக்க வைத்துள்ளது. தமுமுகவினர் இதுவரை ஜனநாயகத்தை மீறவில்லை. காவல்துறை தனது கடமையை வாக்களித்தப்படி
செய்யாவிடில், அதன் பின் விளைவுகளுக்கு காவல்துறைதான் பொறுப்பேற்க வேண்டும். காரணம், எங்களின் ஒவ்வொரு ஆம்புலன்ஸும் எங்களது ரத்தம் வியர்வையினால் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆம்புலன்ஸின் மீது விழுந்த தாக்குதல், எங்களின் நெஞ்சங்களின் மீது விழுந்த தாக்குதல்களாகும்.

Koothanallur Muslims

Related

TMMK 626470432028110508

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item