அல் உம்மா தலைவர் முஹம்மது அன்சாரி கோவை மத்திய சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றம்

கோவை அல் உம்மா தலைவர் முஹம்மது அன்சாரி,குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் உள்ளார்.இவரை சென்னை புழல் சிறைக்கு மாற்றி சிறை நிர்வாகம் உத்திரவிட்டது. இதையடுத்து அன்சாரி பலத்த பாதுகாப்புடன் (10ம் தேதி சனிக்கிழமை) சென்னை புழல் சிறைக்கு கொண்டு சொல்லப்பட்டார்.

இந்த தகவல் சிறுபான்மை உதவி அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு தெரியவந்தது. உடனே சமுதாய இயக்கத் தலைவர்கள்,பாப்புலர் ஃபிரண்ட் மாநில துனை தலைவர் இஸ்மாயில், தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர் அலி, கோவை உமர், முஸ்லிம் லீக் தலைவர் காதர்மைதீன், அப்துல் ரஹ்மான் எம்.பி, இந்திய தவ்ஹித் ஜமாத் தலைவர் பாக்கர், குணங்குடி அனிபா, மற்றும் அரசு உயர்அதிகாரிகளுக்கு அறக்கட்டளை நிர்வாகி கோவை தங்கப்பா, தகவல் தெரிவித்தார்.

இதற்கிடையில் அன்சாரி மனைவிக்கு தகவல் கிடைக்க புழலுக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து தன் மூன்று பெண் குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள் இருப்பு போராட்டம் நடத்தினார்.பிறகு காவல் துறை உயர் அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்குப் பிறகு கோவை குற்றவியல் அலுவலக மேலாளர் மல்லிகாவிடம் மனு அளித்தனர்.பிறகு கலெக்டர் வேறு நிகழ்ச்சியில் உள்ளதால் அவர் அன்சாரி மனைவியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 'உங்கள் கணவரை கோவை மத்திய சிறைக்கு மாற்ற சிறை நிர்வாத்திற்க்கு பரிந்துரை செய்கிறேன்'. என்றார்.

பிறகு உள்துறை செயலாளர் அவர்களுக்கு கலெக்டர் அலுவலகம் மூலம் மனு கொடுத்தார். அம்மனுவில் "கோவையில் நடந்த வெடிகுண்டு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 13 வருடங்களாக கோவை மத்திய சிறையிலேயே தன் தண்டனை காலத்தை கழித்து வரும் எனது கணவர் முஹம்மது அன்சாரி எக்காரணமும் இல்லாமல் மிகக் கொடுமையான முறையில் அதிகாலை 5 மணிக்கு சிறைமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

எங்களுக்கு திருமணமாகி இரண்டு கைக்குழந்தைகள் உட்பட மூன்று பெண் குழந்தைகள் உண்டு. எனது கணவர் ஏற்கனவே கடுமையான நீரழிவு நோயாலும் அவதிப்பட்டு வருகிறார்.மேலும் அவருக்கு இருதய நோயும் உண்டு நான் சென்ற முறை வியாழனன்று அவரைக் காணச்சென்ற போது சென்ற போது மிகவும் சோர்வாக இருந்தார்.

நானும் எங்களது குடும்பத்தார் அனைவரும் கோவையில் தான் வசிக்கின்றோம். சிறைமாற்றம் செய்த காரணத்தால் எங்களின் குடும்பத்தாருக்கும்,எங்களது குழந்தைகளுக்கும் மிக நீண்ட தூரம் பயணம் செய்து மனு நேர்காணல் சென்று காண சிரமமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு அவரை கோவை மத்திய சிறைக்கே மாற்றம் செய்து தரும்படி தங்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன்". என மனுவில் கூறியுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை சிறுபான்மை உதவி அறக்கட்டளை நிர்வாகிகள் உம்மா ஷா, கோவை தங்கப்பா, அபுதாஹிர், தாஜ்பாபு, ரபிக், ஏர்டெல் அபு ஆகியோர் செய்து வந்தார்கள்.
source:mediavoice
www.koothanallurmuslims.com

Related

இது இறுதித் தீர்ப்பு அல்ல... TMMK

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை: 1949 முதல் எதிர்பார்க்கப்பட்ட பாபர் பள்ளிவாசல் தொடர்பான வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன...

பாப்ரி மஸ்ஜித்:முஸ்லிம்கள் அமைதிகாக்க வேண்டும்- முஸ்லிம் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கை

பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பு வரும் வேளையில் தீர்ப்பு எவ்வாறிருந்தாலும் முஸ்லிம்கள் அமைதிகாக்கவேண்டுமென அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.தமிழகத்தின் அனைத்து முஸ்லி...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item