பாசிச பயங்கரவாத தொடர்புகளை பாப்புலர் ஃபிரண்ட் அம்பலப்படுத்தும்- தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

ஜூலை.25:கடந்த சில ஆண்டுகளாக நாட்டையே உலுக்கி வந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கும் ஹிந்துத்துவ தீவிரவாததிற்குமுள்ள தொடர்பை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக தேசிய அளவிலான பிரசாரத்தை தொடங்கி வைப்பது என கோழிக்கோடில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2006-ம் ஆண்டிலிருந்தே நடைபெற்றுவரும் ஏழு மிகப்பெரிய குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் ஈடுபட்டிருப்பது சமீபத்தில் தெரிய வந்துள்ளது.

இந்திய திருநாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது ஆர்.எஸ்.எஸ். தான் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மக்கா மஸ்ஜித்,அஜ்மீர் தர்கா மற்றும் இது போன்ற எல்லா குண்டு வெடிப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் சம்பந்தப்பட்டிருப்பதை சி.பி.ஐ. விசாரணையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

முன்னதாக இதில் முஸ்லிம்கள் அல்லது வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் சம்மந்தப்பட்டிருப்பதாக முத்திரை குத்தப்பட்டிருந்தது. இதனால் பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டு இன்றும் சிறைச்சாலைகளில் வாடிவருகின்றனர்.

இதில் மிகுந்த கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் ஹிந்துத்வா தீவிரவாதக் குழுக்கள் இராணுவ வசதிவாய்ப்புகள் உட்பட அரசு இயந்திரங்கள் அனைத்தையும் குண்டுவெடிப்புகளுக்கு பயன்படுத்தி இருக்கின்றனர். ஆனால் மீடியாக்களும் காவல்துறையும் தீவிரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். பங்குபெற்றிருப்பதை கண்டுகொள்வதில்லை.

பாப்புலர் ஃபிரண்டின் பிரச்சாரம் போஸ்டர்கள், கையேடுகள் (Pamphlets), ஆர்பாட்டங்கள் பொதுக்கூட்டங்கள் வாயிலாக இருக்கும்.

மேலும் இச்செயற்குழுக்கூட்டம்,கேரளாவில் தொடர்ந்து நடைபெற்றுவரும் காவல்துறை பயங்கரவாதத்தையும்,பாப்புலர் ஃபிரண்டை குற்றவாளிக் கூண்டில் ஏற்றியிருக்கும் மீடியாக்களின் பிரச்சாரத்தையும் வன்மையாக கண்டிக்கிறது.

துரதிஷ்ட வசமாக உள்ளூரில் நடைபெற்ற ஒரு சாதாரண குற்றச்செயலுக்காக விசாரணை என்ற பெயரில் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பாப்புலர் ஃபிரண்ட் தொண்டர்களை குறிவைத்து அப்பாவி முஸ்லிம்களை தொந்தரவு செய்வதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என கேரள மாநில அரசாங்கத்தை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

பாப்புலர் ஃபிரண்டை வில்லனாக சித்தரிக்கும் தொடர் பிரச்சாரத்தை செய்யும் ஒரு சில மீடியாக்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையின் பத்திரிக்கை தர்மத்தை நியாயமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசாங்கத்தின் அல்லது கெட்ட உள்நோக்கம்கொண்ட கும்பல்களின் கைப்பாவையாக செயல்பட வேண்டாம் என்றும் இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறது.

கேரளா,தமிழ்நாடு,கர்நாடகாவில் நடைபெற இருக்கும் சுதந்திர தின அணிவகுப்புகள் உட்பட அனைத்து சுதந்திர தினக் கொண்டாட்ட ஏற்பாடுகள் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.

இதில் சேர்மன் இ.எம்.அப்துர் ரஹ்மான் பொதுச்செயலாளர் கே.எம்.ஷெரிப் மற்றும் இதர உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.

Koothanallur Muslims Website

Related

SDPI 7921788414795437221

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item