மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர்கள் மீது வலுவான சந்தேகம்

ஹைதராபாத்:மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மூத்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களின் மீது சந்தேகம் வலுவடைந்துள்ளது.
9 பேர் பலியாக காரணமாயிருந்த இந்த குண்டு வெடிப்பு பற்றிய சதித்திட்டம் இவர்களுக்கு முன்கூட்டியே அறிந்திருக்கூடும் எனவும், தாக்குதலுக்கு பிறகு கொலைகாரர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், புலனாய்வு அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.

சிபிஐ 10 லட்சம் சன்மானம் தருவதாக அறிவித்திருந்த இரண்டு ஹிந்துத்துவ தீவிரவாதிகளான ராம்சந்திர கல்சங்கரா மற்றும் சந்தீப் டாங்கே ஆகியோர், அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கு 2007, மாலேகோன் குண்டுவெடிப்பு வழக்கு 2008 ஆகிய வழக்குகளிலும் தேடப்படுகின்றனர்.

ஒரே அமைப்பை சேர்ந்த ஹிந்து தீவிரவாதிகளே இந்த மூன்று குண்டுவெடிப்புகளுக்கும் காரணமாயிருக்கலாம் என்று அதிகாரிகளுக்கு தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.

உ.பி யிலிருந்து அஷோக் பெரி, கான்பூரிலிருந்து அஷோக் வர்ஷினி (ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரவாதிகள்) மேலும் தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் ஷர்மா (ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரவாதிகள்) ஆகியோர் அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களும் ஹைதராபாத் கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

பெரி, வர்ஷினி கொடுத்த தகவலின்படி குண்டுவெடிப்பு பற்றி இவர்களுக்கு முங்கூட்டியே தெரியும் என்றும் சதிகாரர்களுக்கு அடைக்களம் தந்திருப்பதும் தெரிகிறது.

குப்தா மற்றும் ஷர்மா ஆகியோருக்கு மாலேகோன் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் லெஃப்டினண்ட் ப்ரசாத் புரொஹித் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை குப்தா, ஷர்மா, கல்சங்கரா, டாங்கே மற்றும் சுனில் ஜோஷி ஆகியோர் நடத்தியதாக அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஷர்மா 2 மாதங்களுக்கு முன்பே செகந்தராபாத்தில் தங்கி நோட்டமிட்டு ஜோஷி, கல்சங்கரா, டாங்கேவுக்கு தகவல் தந்ததாகவும் இவர்கள் 3 நாட்களுக்கு முன் அங்கு வந்து 18ஆம் தேதியன்று பள்ளிக்குள் சென்று குண்டை வைத்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஜோஷி மர்ம நபர்களால் கொல்லப்பட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Koothanallur Muslims

Related

Siva sena 619093026002191514

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item