பாபர் மசூதி இடிப்பு-17 ஆண்டுகளுக்குப் பின் லிபரான் கமிஷன் அறிக்கை தாக்கல்

டெல்லி: பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் இன்று தனது அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஒப்படைத்தது.
1992ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் கல்யாண் சிங் தலைமையில் பாஜக ஆட்சியில் இருந்தபோது அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ். லிபரான் தலைமையில் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் குழு அமைத்தார்.
பாபர் மசூதியை இடிக்க தூண்டிய காரணிகள் எவை என்பது குறித்து விசாரிக்க இந்த கமிஷனுக்கு உத்தரவிடப்பட்டது.
தொடக்கத்தி்ல் 1993ம் ஆண்டு மார்ச் 16ம் தேதியன்று இந்த கமிஷன் தனது அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து நீட்டிப்பு கோரி வந்தது. இந்தக் குழு கடந்த 17 ஆண்டுகளாக விசாரணை நடத்தியது. 48 முறை இந்த கமிட்டியின் ஆயுள் காலம் நீட்டிக்கப்பட்டது.
கடைசியாக இந்த ஆண்டு மார்ச் மாதம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது. நாட்டிலேயே அதிக அளவு செலவு பிடித்த கமிஷனும் இதுதான். இதுவரை ரூ. 8 கோடி அளவுக்கு இந்த கமிஷனுக்காக அரசு செலவழித்துள்ளது
இந் நிலையில் இன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையில் தனது அறிக்கையை பிரதமரிடம் தாக்கல் செய்தார் நீதிபதி லிபரான்.அந்த அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது உடனடியாகத் தெரியவில்லை.
டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடன் நாடு முழுவதும் வெடித்த மதக் கலவரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாயினர். இதையடுத்து 10 நாட்களில் இந்த கமிட்டி அமைக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவிலேயே நீண்ட காலமாக விசாரணை நடத்தி வந்த விசாரணைக் கமிஷன் என்ற பெயர் இந்த கமிட்டிக்குக் கிடைத்துள்ளது.
சுமார் 400 முறை இந்தக் குழு கூடி நூற்றுக்கணக்கானோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை வாங்கியது. அதில் பாஜக தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் முதல்வர் கல்யாண் சி்ங் ஆகியோரும் அடக்கம்.
கமிஷன் கடைசி சாட்சியை 2005ம் ஆண்டு விசாரித்து முடித்தது.

தாமதத்துக்கு சிலரே காரணம்..லிபரான்:
சிலரது ஒத்துழைப்பு இல்லாமை, சிலரது நடவடிக்கைகள் காரணமாகத் தான் அறிக்கை தாக்கல் செய்ய தாமதமானதாக கூறியுள்ள லிபரான், அதில் கூறப்பட்டுள்ள தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டார்.

Source:thatstamil

Related

librahan 894796541920790076

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item