தேசிய அளவிலான கட்டமைப்பு உருவாக்கம்:சென்னையில் நடந்த‌ வழக்கறிஞர்கள் கூட்டத்தில் முடிவு

நேற்று சென்னையில் ந‌டைபெற்ற‌ இந்திய‌ அள‌விலான‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் கூட்ட‌த்தில் தேசிய‌ அள‌வில் வ‌ழ‌க்க‌றிஞ‌ர்க‌ளுக்கான‌ க‌ட்ட‌மைப்பு (National Lawyers Network) ஒன்று உருவாக்குவ‌தாக‌ முடிவுச்செய்ய‌ப்ப‌ட்ட‌து.
இந்த‌ கூட்ட‌த்தை பாப்புல‌ர் ஃப்ர‌ண்ட் ஆஃப் இந்தியா ஏற்பாடுச்செய்திருந்த‌து. இக்கூட்ட‌த்தில் இந்தியாவின் ப‌ல்வேறு மாநில‌ங்க‌ளிலிருந்து 50 வ‌ழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் க‌ல‌ந்துக்கொண்ட‌ன‌ர். தேசிய‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் க‌ட்ட‌மைப்பு என்று பெய‌ரிட‌ப்ப‌ட்ட‌ இந்த‌ அமைப்பின் த‌லைவ‌ராக‌ அஹ‌ம‌தாபாத்தைச்சார்ந்த‌ வழக்கறிஞர் ஐ.எம்.முன்ஷி தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்டார். பொதுச்செய‌லாள‌ராக‌ டெல்லியைச்சார்ந்த‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர் ப‌ஹார் யு.பார்கி அவ‌ர்க‌ளும்,தேசிய‌ ஒருங்கிணைப்பாள‌ராக‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர் கே.பி.முஹ‌ம்ம‌து ஷ‌ரீஃப்(கேர‌ளா) அவ‌ர்க‌ளும் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். மேலும் துணைத்த‌லைவ‌ர்க‌ளாக‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் அனீஷ் அலி(பெங்க‌ளூர்), அஹ்ம‌த் பாஷா(விஜ‌ய‌வாடா), முன‌வ்வ‌ர் செய்ய‌த்(புனே) ஆகியோரும், செய‌லாள‌ர்க‌ளாக வழக்கறிஞர்கள் பி.சி.ந‌வ்சாத்(க‌ண்ணூர்),கிஷ‌ர் ப‌ட்டேல்(அவுர‌ங்க‌பாத்), ஷாஜ‌ஹான்(ம‌துரை) ஆகியோரும், பொருளாள‌ராக‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர் காலித் ஷேக்(அஹ‌ம‌தாபாத்) அவ‌ர்க‌ளும் தேர்வுச்செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர். இக்கூட்ட‌த்திற்கு வ‌ழ‌க்க‌றிஞ‌ர் ஐ.எம்.முன்ஷி அவ‌ர்க‌ள் த‌லைமை தாங்கினார். வ‌ழ‌க்க‌றிஞ‌ர் ப‌ஹார் யு.பார்கி அவ‌ர்க‌ள் பொருளுரை வ‌ழ‌ங்கினார். நிக‌ழ்ச்சிக்கு அறிமுக‌ உரையை வ‌ழ‌க்க‌றிஞ‌ர் கே.பி.முஹ‌ம்ம‌து ஷ‌ரீஃப் அவ‌ர்க‌ள் நிக‌ழ்த்தினார்க‌ள். பாப்புல‌ர் ஃபிர‌ண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய‌த்த‌லைவ‌ர் இ.எம்.அப்துற்ரஹ்மான் அவ‌ர்க‌ள் இக்கூட்ட‌த்தில் க‌ல‌ந்துக்கொண்டு உரை நிக‌ழ்த்தினார்க‌ள்.

இக்கூட்ட‌த்தில் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌ தீர்மான‌ங்க‌ள் பின் வ‌ருமாறு:

1.பாப்ரி ம‌ஸ்ஜித் இடிப்பு ச‌ம்ப‌ந்த‌மாக‌ ச‌ம‌ர்ப்பிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ லிப‌ர்ஹான் க‌மிஷ‌ன் அறிக்கையை ந‌ட‌ப்பு பாராளும‌ன்ற‌க்கூட்ட‌த்திலேயே வைக்க‌வேண்டும்.

2.ச‌மீப‌த்தில் காணாம‌ல் போன‌தாக‌ கூற‌ப்படும் பாப‌ரி ம‌ஸ்ஜித் வ‌ழ‌க்கு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ ஆவ‌ண‌ங்க‌ளை மீட்க‌ உ.பி. அர‌சு உட‌ன‌டியாக‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வேண்டும்.

3.மைசூரில் ச‌மீப‌த்தில் ந‌ட‌ந்த‌ க‌ல‌வ‌ர‌த்தையொட்டி கைதுச்செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ பாப்புல‌ர் ஃபிர‌ண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பின‌ர்க‌ள் உள்ளிட்ட‌ அப்பாவி முஸ்லிம்க‌ளை உட‌னே விடுத‌லைச்செய்து அவ‌ர்க‌ள் மீது போட‌ப்ப‌ட்டுள்ள‌ வ‌ழ‌க்குக‌ளை வாப‌ஸ் பெற‌வேண்டும்.

4.த‌மிழ‌க‌ அர‌சு சிற‌ப்பு தின‌ங்க‌ளில் சிறைகைதிக‌ளுக்கு ம‌ன்னிப்பு அளித்து விடுத‌லைச்செய்வ‌தில் ம‌த‌ ரீதியான‌ பார‌ப‌ட்ச‌த்தை காண்பிக்க‌க்கூடாது. மேலும் இக்கூட்டம் நீதி ம‌ன்ற‌ங்க‌ளில் வ‌ழ‌க்குக‌ள் விரைவாக‌ ந‌ட‌க்க‌வும், ஜாமீன் எளிதில் கிடைக்க‌வும், வ‌ழ‌க்கிலிருந்து விடுவிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு உரிய‌ நிவார‌ண‌ம் கிடைக்க‌ ஏதுவாக‌ குற்ற‌விய‌ல் ந‌டைமுறைச்ச‌ட்ட‌ க‌ட்டுப்பாட்டில் போதுமான‌ ச‌ட்ட‌த்திருத்த‌ங்க‌ளை கொண்டு வ‌ர‌வேண்டும் என‌ அர‌சை வ‌லியுறுத்திய‌து.

இக்கூட்ட‌த்தில் க‌ல‌ந்துக்கொண்ட‌வ‌ர்க‌ளை வ‌ழ‌க்க‌றிஞ‌ர் ந‌வ்சாத் வ‌ர‌வேற்றார். வ‌ழ‌க்கறிஞ‌ர் அனீஷ் அலி ந‌ன்றியுரை ந‌வின்றார்.

வெளியிடுப‌வ‌ர்:
தொட‌ர்பூட‌க‌ச்செய‌ல‌ர், பாப்புல‌ர் ஃப்ர‌ண்ட் ஆஃப் இந்தியா,
த‌லைமைச்செய‌ல‌க‌ம், பெங்க‌ளூர்.

Related

pfi 5078274383679003904

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item