முக்கியப்பிரச்சனைகள் குறித்து விவாதம் நடத்த ஒபாமாவுக்கு அஹ்மத் நஜாத் அழைப்பு
http://koothanallurmuslims.blogspot.com/2009/07/blog-post_9738.html
தெஹ்ரான்:முக்கிய பிரச்சனைகள் குறித்து உலக மக்கள் சமூகத்தின் முன் விவாதம் நடத்த அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் அழைப்பு விடுத்துள்ளார்.
ஒபாமா தயாரென்றால் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை கட்டிடத்தில் வைத்து உலக நாட்டுத்தலைவர்கள் முன்னிலையில் கொள்கை விவாதம் நடத்துவதற்கு தான் தயாராக இருப்பதாக நஜாத் கூறினார்.ஈரான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபின் மருத்துவ பல்கலைகழக தலைவர்கள் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியொன்றில் உரை நிகழ்த்தும்பொழுது இதனை தெரிவித்தார்.ஆனால் இது பற்றி ஒபாமாவின் தரப்பிலிருந்து எந்த பதிலும் இதுவரை வரவில்லை.ஈரானுடனான உறவில் முன் அதிபர் ஜார்ஜ் w புஷ்ஷின் அணுகுமுறைக்கு மாற்றமான கருத்தைக்கொண்டுள்ள ஒபாமா நஜாதின் அழைப்பிற்கு பதிலளிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.2006 ல் இதேபோல் அன்றைய அதிபராக இருந்த ஜோர்ஜ் புஷ்ஷையும் நஜாத் விவாதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.புஷ்ஷிற்கு அனுப்பிய 18 பக்க கடிதத்தில் அரசியல்,மதம்,சர்வதேச அளவில் மாறுப்பட்டக்கருத்துகளை பற்றி விவாதிக்க தயாரென்று தெளிவுப்படுத்தியிருந்தார்.ஆனால் புஷ் அதற்கு பதிலளிக்கவில்லை.
இதற்கிடையில் அணு ஆற்றல் சம்பந்தமான பேச்சுவார்த்தை வருகிற அக்டோபரில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடைபெறக்கூடும் என்று இஸ்ரேலிய பத்திரிகையான ஹாரட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.ஈரானில் அமெரிக்க தூதர் டென்னிஸ் ரோசை மேற்கோள் காட்டியுள்ள செய்தியில் ஈரானின் அணு சக்தி பிரச்சனையில் அமெரிக்காவின் மாற்றமான நிலை பேச்சு வார்த்தையின் போது வெளியாகும் என்று அச்செய்தி கூறுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்