சங்பரிவாரின் பாதையில் சீனா..?
http://koothanallurmuslims.blogspot.com/2009/07/blog-post_4307.html
இந்தியாவில் ஏதேனும் ஒருசிறு வாய்ப்பு கிடைத்தாலும், அல்லது அந்த வாய்ப்பை உருவாக்கிக்கொண்டு முஸ்லிம்களை கருவருப்பதை தலையாய பணியாக செய்துவருவது சங்பரிவார் கும்பலாகும். அந்த சங்பரிவாரின் பாதையை தனதாக்கிக்கொண்டதோ என்று சந்தேகப்படும்வகையில் சீனாவின் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
இது தொடர்பாக பத்திரிக்கைகளில் வந்துள்ள செய்தியில்,
சீனாவில் வடமேற்கு பகுதியில் உள்ளது ஷின்ஜியாங் மாநிலம். இந்த மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையான 2 கோடியில் பாதிப்பேர் உய்க்குர் இன முஸ்லிம்கள் ஆவார்கள். ஆனால் தலைநகர் உரும்கியில் சீனர்கள் தான் மெஜாரிட்டியாக உள்ளனர். முஸ்லிம்கள் தனி நாடு கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் கடந்த மாதம் முஸ்லிம்களுக்கும், உய்க்குர் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இந்த மோதலை அரசாங்கம் கையாண்ட விதம் முஸ்லிம்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். அப்போது சீனர்களுடன் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலிலும் கலவரத்தை ஒடுக்க போலீசார் எடுத்த நடவடிக்கையிலும் 156 பேர் பலியானார்கள்.
கலவரத்தின் போது, வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும், கொள்ளையடித்ததாகவும், சீனர்களை அடித்து உதைத்தாகவும், கொலைகளில் ஈடுபட்டதாகவும் 55 பெண்கள் உள்பட 1434 பேர் கைது செய்யப்பட்டனர். தங்கள் குடும்பத்தினரையும் வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்ததாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.இந்த நிலையில் நேற்றும் கலவரம் நடந்தது. இதில் 300&க்கும் மேற்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அரசுக்கு எதிராக குரல் எழுப்பினார்கள். அப்போது அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்தியதாக சீனப்பத்திரிகைள் தெரிவித்து உள்ளன.மாநிலத்தில் உள்ள காஷி நகரில் 200&க்கும் மேற்பட்டவர்கள் சீனாவின் மிகப்பெரிய மசூதி முன்பு திரண்டனர். ஆனால் அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். யீலி கசக் பகுதி, அக்சு நகரம் ஆகிய இடங்களிலும் கலவரம் நேற்று ஏற்பட்டது.
[தினத்தந்தி]
[தினத்தந்தி]
சில மாதங்களுக்கு முன் திபெத்தியர்கள் சீனர்களின் அடக்குமுறை காரணமாக தனி சுயாட்சி கோரினார்கள். அவர்களை அடக்குகிறோம் என்ற பெயரில் ரத்தக்களறியாக்கிய சீன அரசு, அதே அடிப்படையில் சிறுபான்மை முஸ்லிம்களையும் அழிக்க நினைக்கிறது. பெரும்பான்மை சீனர்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மை முஸ்லிம்களுக்கு நியாயம் வழங்குவதற்கு பதிலாக, நூற்றுக்கணக்கான முஸ்லிம்களின் உயிரை பறிப்பது , பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கானோரை கைது செய்வது என்ற சீன அரசின் இந்த நடவடிக்கை சங்பரிவாரத்தின் பிரதிபலிப்பாக உள்ளது. உலக முஸ்லிம்கள் மட்டுமன்றி நடுநிலையாளர்கள் சீனாவின் இந்த தான்தோன்றி தனத்தை கண்டிக்க முன்வரவேண்டும். குறிப்பாக இந்தியாவில் மதசார்பின்மை பேசும் காம்ரேடுகள் சீனாவின் இந்த அடக்குமுறையை கண்டிக்கவேண்டும். அடக்குமுறையால் அல்லாஹ்வின் அடிமைகளை அடக்கிட முடியாது என்பதற்கு வரலாறு நெடுகிலும் சான்றுகள் உண்டு என்பதை சீனாவிற்கு சொல்லிக்கொள்கிறோம்.