மைசூர் கலவரத்திற்கு பின்னால் ஸ்ரீராம‌ சேனா

மைசூரிலிலுள்ள கைதாம‌ர‌ந‌ஹ‌ள்ளியில் இந்த‌ மாத‌ம் 2ஆம் தேதி ந‌டைபெற்ற‌ க‌ல‌வ‌ர‌த்தில் 3 பேர் ம‌ர‌ணிப்ப‌த‌ற்கு கார‌ண‌மான‌ ப‌ள்ளிவாச‌லில் ப‌ன்றியின் மாமிச‌த்தை எறிந்த‌ ச‌ம்ப‌வ‌த்திற்கு பின்னால் ஸ்ரீராம‌ சேனா தான் கார‌ண‌ம் என‌ கைதுச்செய்ய‌ப்ப‌ட்ட‌ அத‌ன் உறுப்பின‌ர்க‌ள் ச‌ம்ம‌தித்துள்ள‌ன‌ர்.
ஹிந்துத்தீவிர‌வாத‌ இய‌க்க‌மான‌ ஸ்ரீராம‌சேனாவின் தீவிர‌த்தொண்ட‌ர்க‌ளாகிய‌ கிருஷ்ணா, ராஜு ஆகியோர்தான் ப‌ன்றியின் மாமிச‌த்தை ப‌ள்ளிவாச‌லில் போட்ட‌து. இதைத்தொட‌ர்ந்து ஏற்ப‌ட்ட‌ க‌ல‌வ‌ர‌த்தில்தான் 3 பேர் ம‌ர‌ண‌ம‌டைய‌வும் ஏராள‌மானோர் காய‌ம‌டைய‌வும் கார‌ண‌மான‌ க‌ல‌வ‌ர‌ம் ஏற்ப‌ட்ட‌து. ச‌ம்ப‌வ‌த்தைத்தொட‌ர்ந்து கைதுச்செய்ய‌ப்ப‌ட்ட‌ கிருஷ்ணா(வ‌ய‌து30)குற்ற‌த்தை ஒப்புக்கொண்ட‌தை உய‌ர் போலீஸ் அதிகாரிக‌ள் தெரிவித்த‌ன‌ர். இவ‌னுடைய‌ கூட்டாளியான‌ த‌லைம‌றைவாக‌ இருக்கும் ராஜுவை கைதுச்செய்வ‌த‌ற்கு காவ‌ல்துறை முடுக்கிவிட‌ப்ப‌ட்டுள்ள‌து. இர‌ண்டுமுறை கைதாம‌ர‌ந‌ஹ‌ள்ளியில் ஸ்ரீராம‌சேனா த‌லைவ‌ன் பிர‌மோத் முத்த‌லிக் ந‌ட‌த்திய‌ ஆவேச‌க‌ர‌மான‌ உண‌ர்ச்சியைத்தூண்டும் உரைதான் ப‌ன்றியின் மாமிச‌த்தை ஹ‌லீமா ப‌ள்ளிவாச‌லில் எறிய‌ கார‌ண‌மான‌து என‌ கைதுச்செய்ய‌ப்ப‌ட்ட‌ கிருஷ்ணா போலீஸ் விசார‌ணையில் கூறியுள்ளான்.
முன்பே ஸ்ரீராம‌சேனாதான் ப‌ள்ளிவாச‌லில் ப‌ன்றியின் மாமிச‌த்தை போட்ட‌து என‌ ப‌த்திரிகையாள‌ர் ச‌ந்திப்பில் வெளிப்ப‌டுத்திய‌ பாப்புல‌ர் ஃப்ர‌ண்டின் மாவ‌ட்ட‌த்த‌லைவ‌ர் செய்ய‌த் க‌லீம் உட்ப‌ட‌ 14 மாவ‌ட்ட‌ பாப்புல‌ர்ஃப்ர‌ண்ட் பொறுப்பாள‌ர்க‌ளை கைதுச்செய்து ஜாமீன் வ‌ழ‌ங்க‌முடியாத‌ வ‌ழ‌க்குக‌ளை ப‌திவுச்செய்து சிறையில் அடைத்த‌து க‌ர்நாட‌கா காவ‌ல்துறை. ஸ்ரீர‌ங்க‌ப்ப‌ட்டின‌த்திலிலுள்ள‌ ஒரு இறைச்சி வியாபாரியிட‌மிருந்து 1500 ரூபாய்க்கொடுத்து பூஜைக்காக‌ என்றுச்சொல்லி பன்றி இறைச்சியை வாங்கி ப‌ள்ளிவாச‌லில் கொண்டு போட்ட‌தாக‌ கிருஷ்ணா கூறியுள்ளான். மேலும் இவ‌னுக்கு கைதாம‌ர‌ந‌ஹ‌ள்ளியிலிலுள்ள ஒரு ந‌பருடைய‌ உத‌வியும் கிடைத்துள்ள‌து.
மைசூர் க‌ல‌வ‌ர‌த்தில் கைதுச்செய்ய‌ப்பட்டு பல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள‌ அப்பாவி முஸ்லிம்க‌ள் ம‌ற்றும் ஹிந்துக்க‌ள் 300க்கு மேற்ப்ப‌ட்டோர்க‌ளை விடுத‌லைச்செய்ய‌ கோரி மைசூரில் பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாத்தலைமையில் முஸ்லிம்க‌ள் ந‌ட‌த்திய‌ அமைதியான‌ ஆர்ப்பாட்ட‌த்தில்தான் காவ‌ல்துறை அராஜ‌கமாக‌ அடித‌டி ந‌ட‌த்தி க‌ண்ணீர் புகை உப‌யோகித்த‌து. முஸ்லிம்க‌ளை ஆவேச‌ம் அடைய‌ச்செய்து க‌ல‌வ‌ர‌த்தை ஏற்ப‌டுத்த‌ ஸ்ரீராம‌சேனாவும் அத‌னுடைய‌ த‌லைவ‌ன் பிர‌மோத் முத்த‌லிக்கும் ந‌ட‌த்திய‌ ச‌தித்திட்ட‌ம் வெளிப்ப‌டுத்த‌ப்ப‌டுள்ள‌தைத்தொட‌ர்ந்து க‌ர்நாட‌கா அர‌சும், காவ‌ல்துறையும் சிக்க‌லில் மாட்டியுள்ள‌ன‌.
ப‌ஜ்ர‌ங்த‌ள் ம‌ற்றும் ஸ்ரீராம‌சேனா ஆகிய‌வ‌ற்றை த‌டைச்செய்து பிர‌மோத் முத்த‌லிக்கை கைதுச்செய்ய‌வேண்டும் என‌ க‌ர்நாட‌கா ச‌ட்ட‌ச‌பை காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ள் கூட்ட‌த்தில் வ‌லியுறுத்த‌ப்ப‌ட்ட‌து.

செய்தி:தேஜ‌ஸ் ம‌லையாள‌ நாளித‌ழ்

Related

Sriram Sena 6869764097776976518

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item