கேரளாவில் அரசே நடத்தும் வட்டியில்லா நிதி நிறுவனம்
http://koothanallurmuslims.blogspot.com/2009/07/blog-post_13.html
திருவனந்தபுரம்:கேரள மாநில அரசு பங்குதாரராக பங்கேற்று நடத்தும் வட்டியில்லா நிதி நிறுவனத்தை துவங்க இருக்கிறது. இஸ்லாமிய வங்கியல் முறைப்படி துவங்கயிருக்கும் இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம் வட்டியில்லா முதலீட்டை கவருவதாகும்.
கேரளா தொழில்துறை இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.வங்கி அல்லாத நிதி நிறுவனமாக பதிவுச்செய்யப்படும் இந்நிறுவனத்தில் கேரள அரசு பொதுத்துறை நிறுவனமான தொழில் விரிவாக்க துறை 11 சதவீத பங்குகளை வாங்கும். நூறு கோடி ரூபாய் மூலதனத்தில் இவ்வங்கித் தொடங்கப்படுகிறது.
கேரளாவிற்கு வெளியே உள்ளவர்களும் இதில் முதலீடுச்செய்யலாம். வெளிநாட்டு வாழ் மலையாளிகளையும்,நிறுவனங்களையும் குறிக்கோளாகக்கொண்டே இந்நிறுவனம் ஆரம்பிக்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் பங்குசேர்பவர்களுக்கான கூட்டம் வருகிற 15ஆம் தேதி கேரளாவிலுள்ள மஸ்கட் ஹோட்டலில் வைத்து நடைபெறுகிறது. தொழில் துறை அமைச்சர் எழமரம் கரீம் இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச்செய்துள்ளார். வட்டியில்லா முதலீடுகளைப்பெற்று அரசின் அடிப்படை வசதிகள் விரிவாக்கத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு பெரிய திட்டங்களில் உபயோகிப்பதுதான் இந்நிறுவனத்தின் நோக்கம். அரசுத்திட்டங்கள் மட்டுமல்லாமல் பாதுகாப்பு என்று கருதப்படும் பல்வேறு நிறுவனங்களுக்கும் நிதி அளிப்பதும் இதன் திட்டத்தில் உட்பட்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு தனியார் அமைப்புகளும், தனி நபர்களும் வட்டியில்லா வங்கியை நடத்தி வந்தாலும் ஒரு மாநில அரசே இவ்வங்கியை ஏற்று நடத்துவது இதுதான் முதல் முறை. முதலீடுச்செய்பவர்க்ளுக்கு வட்டிக்குப்பதிலாக லாபம் விகிதத்தின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும். ஐரோப்பாவில் பெருமளவில் நடைபெறூம் வட்டியில்லா வங்கிகள் பற்றிய கேரள தொழில்துறை மேற்பார்வையில் நடத்திய ஆய்வுக்கு பின்னர்தான் இந்நிறுவனம் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது.எர்னஸ்ட் அன்ட் யங் என்ற நிறுவனம்தான் இதைப்பற்றி ஆய்வைமேற்க்கொண்டது. இந்தியாவில் வட்டியில்லா நிறுவனங்களுக்கு பெரும் வாய்ப்பு இருப்பதாக இந்நிறுவனம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் கேரள தொழில்துறை முதன்மை செயலர் டி.பாலகிருஷ்ணன் முனைப்புக்காட்டினார். பல முறை இதுப்பற்றி அவர் சர்ச்சைச்செய்து அதன் முடிவில்தான் இந்நிறுவனம் தொடங்குவதற்கு முடிவுச்செய்யப்பட்டது.
இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படிதான் இந்நிறுவனம் செயல்படும் என்று நிறுவன ஒப்பந்த சரத்தில் குறிப்பிடப்படும்.
Source:madhyamam malayalam daily