மைசூர்:நீதி விசாரணை கோரிக்கையை நிராகரித்தது கர்நாடகா அரசு

மைசூர் பள்ளிவாசலில் பன்றியின் மாமிசங்களை எறிந்ததினால் ஏற்ப்பட்ட கலவரத்தைத்தொடர்ந்து 3 நபர்கள் பலியான நிகழ்வைக்குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று எதிர்கட்சிகளின் கோரிக்கையை மாநில பா.ஜ.க அரசு நிராகரித்தது. இதனால் எதிர்கட்சிகள் சட்டசபையிலிருந்து வெளிநடப்புச்செய்தன.
போலீஸ் விசாரணை தற்பொழுது நடைப்பெற்றுக்கொண்டிருப்பதால் நீதி விசாரணைக்கு தேவையில்லை என்று கூறிய முதல் அமைச்சர் எடியூரப்பா சம்பவத்திற்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவும், கர்நாடகா ஃபாரம் ஃபார் டிக்னிடியும் தான் காரணம் எனக்குற்றம் சாட்டினார்.

ஆனால் பள்ளிவாசலை அசுத்தப்படுத்தி மக்கள் கொந்தளிப்பை ஏற்படுத்தி கலவரத்தை தூண்ட முயற்சிச்செய்த சங்க்பரிவார்களின் சதித்திட்டத்தை முறியடிக்க காவல்துறையோடு ஒத்துழைத்து அமைதியை ஏற்படுத்திய பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர்களை அநியாயமாக கைதுச்செய்ததுதான் புதிய பிரச்சனைகளுக்கு காரணம் என பாப்புலர் ஃப்ரண்ட் தலைமை ஏற்கனவே தெளிவுப்படுத்தியிருந்தது. கலவரத்தின் பெயரால் கைதுச்செய்யப்பட்ட அப்பாவிகளான முஸ்லிம்களையும் ஹிந்துக்களையும் விடுதலைச்செய்ய கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மக்களின் மீது அராஜகத்தாக்குதல் நடத்தியதாக பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதற்கிடையே கலவரத்தைத்தொடர்ந்த்து மைசூரில் ஏற்படுத்தியிருந்த ஊரடங்கு உத்தரவை நீட்டியுள்ளது அரசு. இதற்கு காரணம் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுதலைச்செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பேரணி நடத்த இருப்பதை முன்னிட்டுதான் என்று கூறப்படுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Related

pfi 5182762773034096852

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item