மதநம்பிக்கையின் அடிப்படையில் தீவிரவாதிகளை அடையாளப்படுத்துவது சரியல்ல - மும்பை உயர்நீதிமன்றம்
http://koothanallurmuslims.blogspot.com/2009/07/blog-post_20.html
"தீவிரவாதிகளில் சிலர் இசுலாமியர்கள் என்பதற்காக இசுலாமியர்கள் எல்லோரும் தீவிரவாதிகளல்ல" என்று மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி தனஞ்சய் சந்திரசூட் தெரிவித்தார்.
"மதநம்பிக்கையின் அடிப்படையில் தீவிரவாதிகளை அடையாளப்படுத்துவது சரியல்ல" என்றும் தனது தீர்ப்புரையில் குறிப்பிட்டார்.
"மதநம்பிக்கையின் அடிப்படையில் தீவிரவாதிகளை அடையாளப்படுத்துவது சரியல்ல" என்றும் தனது தீர்ப்புரையில் குறிப்பிட்டார்.
சமயநல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் என்று கருதிய மகாரரஷ்டிர அரசு, R.V.பாஸினின் நூலை தடைசெய்தது. நூலின் மீதான தடையை நீக்கக் கோரிய வழக்கறிஞர் R.V.பாஸின், இந்நூல் "தீர்க்கமான ஆய்வுகள் மற்றும் இசுலாமியர்களின் கலாச்சார, அரசியல் விளைவுகளைக் கருத்தில்கொண்டு எழுதப்பட்டது" என்று வாதிட்டார்.
மும்பை ஜமாத்தே இசுலாமி எ ஹிந்த் என்ற அமைப்பின் இசுலாமிய ஆய்வு மையம் மற்றும் மும்பை அமான் கமிட்டி மற்றும் மகாராஷ்டிரா முசுலிம் வழக்கறிஞர்கள் குழுமம் ஆகிய அமைப்புகள், இப்புத்தகம் இசுலாமிய மதத்தின் புனித கருத்துருவாக்கங்களுக்கு எதிரான காழ்ப்புணர்வில் எழுதப்பட்டது என்று காரணம் சொல்லி தடையுத்தரவு கோரியிருந்தார்கள்.
மும்பை 26/11 தாக்குதலுடன் இசுலாமியர்களின் புனித நூலான குரானைத் தொடர்பு படுத்தி எழுதப்பட்ட இந்தப் புத்தகத்திற்குத் தடைகோரும் மனுவை விசாரித்த நீதிபதி, "அமெரிக்காவில் குற்றவழக்குகளில் கைது செய்யப்படுபவர்களில் பலரும் கருப்பினத்தவர் என்பதற்காக அனைத்து கருப்பினத்தவர்களையும் குற்றவாளிகளாகக் கருதக்கூடாது" என்ற புள்ளிவிபர அறிக்கையை மேற்கோளிட்டு இவ்வாறு தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
வழக்கறிஞர் R.V.பாஸின் மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக தனது "இசுலாமிய அரசியல் கருத்தாக்கமும் முசுலிம்களின் படையெடுப்பும்" என்ற புத்தகம் 2007 ஆம் தடைசெய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் குழுவில் தனஞ்சய் சந்திரசூட் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி - தி டைம்ஸ் ஆப் இந்தியா