பாப்புலர் ஃப்ரண்ட் பரேட் -- சென்னையில் பயிற்சிக்கு தடை??
http://koothanallurmuslims.blogspot.com/2009/07/blog-post_6403.html
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை, மங்களூர், கொச்சி, வயநாடு ஆகிய நான்கு இடங்களில் பல்வேறு தடைகளை தாண்டி சுதந்திர தின அணிவகுப்பு நடத்தியது.. இதைப்போல் இந்த ஆண்டும் நான்கு இடங்களில் அணிவகுப்பு நடத்துவதற்கான பயிற்சிகளை அதன் செயல் வீரர்கள் செய்து வருகிறார்கள்..
இதற்காக ஓட்டேரி இல் உள்ள ஒரு மைதானத்தில் நேற்று பயிற்சி மேற்கொள்ள வந்திருந்தவர்களை போலீசார் தடுத்தனர்..
இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் சென்னை மாவட்ட செயலாளர் முகமது ஹுசேன் கூறுகையில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்துவது எங்கள் உரிமை என்று கூறினார். கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் மதுரையில் ஒரு மிகப்பெரிய விழாவாக நடத்தி முடித்தோம், அதைப்போல் இந்த ஆண்டு கும்பகோணத்தில் நடத்த இருக்கிறோம் என்றார். இரண்டு வாரங்களுக்கு முன்பே நாங்கள் செய்யவிருந்த பயிற்சியை போலீசார் தடுத்தனர், எனவே முறையான அனுமதி கேட்டு காவல்துறையை நாடினோம் ஆனால் இரண்டு வாரங்கள் ஆகியும் அனுமதி குறித்து காவல்துறை எந்த பதிலும் தராததால் இன்று நாங்கள் பயிற்சி மேற்கொள்கிறோம் என்றார்..
சிறிது நேரம் கழித்து காவல்துறையினர் பயிற்சி நடத்த அனுமதி அளித்தனர்...