நாக்பூர் மாநகராட்சியில் பா.ஜ.க-முஸ்லிம் லீக் கூட்டணி!
http://koothanallurmuslims.blogspot.com/2012/02/blog-post_25.html
இதனால் 145 உறுப்பினர்களை கொண்ட நாக்பூர் மாநகராட்சியில் 62 இடங்களை கைப்பற்றிய பா.ஜ.கவுக்கு மாநகராட்சியை ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முஸ்லிம் லீக்கின் இஷ்ரத் அன்ஸாரி, அஸ்லம் கான் ஆகியோர் சங்க்பரிவாரின் அரசியல் கட்சியுடன் மாநகராட்சி ஆட்சியில் பங்காளிகளாக மாறியுள்ளனர்.
முஸ்லிம் லீக்கை தவிர பாரிபா பகுஜன் மஹா சங்க், லோக் பாரதி பார்டி, ரிபப்ளிகன் ஏகதா மஞ்ச் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களுடன் ஒன்பது சுயேட்சை உறுப்பினர்களும் பா.ஜ.க தலைமையிலான நாக்பூர் விகாஸ் அகதி(என்.வி.எ) முன்னணியில் இடம் பெற்றுள்ளனர்.
12 உறுப்பினர்களை கொண்ட பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவை பெற பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால் அவை தோல்வியை தழுவின. ஆறு உறுப்பினர்களை கொண்ட சிவசேனா கட்சி கூட்டணியில் இடம் பெறவில்லை என்றாலும், வெளியே இருந்து ஆதரிப்பார்கள் என கூறப்படுகிறது.
மார்ச் 5-ஆம் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் 41 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி எதிர்கட்சி அந்தஸ்தை வகிக்கிறது. கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. முஸ்லிம் லீக்கை மதவாத கட்சி என்று அழைக்கும் பா.ஜ.கவும், பா.ஜ.கவை பாசிஸ்டு கட்சி என்று அழைக்கும் முஸ்லிம் லீக்கும் ஒன்றிணைந்தது அரசியல் விமர்ச்கர்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது. ஆனால், வெளியே உள்ளவர்களுக்கு ஆச்சரியம் தோன்றினாலும், இது ஒரு பெரிய விஷயமே இல்லை என்று கூறுகிறார் பா.ஜ.கவின் மூத்த மாநகராட்சி உறுப்பினரும், என்.வி.எ கூட்டணியின் கண்வீனருமான அனில் சோலா. காரணம் கடந்த ஊராட்சி, சட்டப்பேரவை தேர்தல்களிலும் முஸ்லிம் லீக் தங்களின் கூட்டணி கட்சிப் போலவே ஒத்துழைத்து பணியாற்றியது என்கிறார் அவர்.பா.ஜ.க எம்.எல்.ஏவான தேவேந்திர ஃபட்னாவிசும் இதனை உறுதிச்செய்கிறார்.
முஸ்லிம் வாக்குகள் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் நாக்பூர் சென்ட்ரல், நாக்பூர் வெஸ்ட் ஆகிய தொகுதிகளில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றனர். பா.ஜ.க தலைவர் நிதின் கட்கரியின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் முஸ்லிம் லீக்குடன் கூட்டணி ஏற்பட்டுள்ளதாம்.
2014-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் கட்கரி முதன் முதலாக தேர்தல் களத்தில் நாக்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிட உள்ளார். இதில் முஸ்லிம் வாக்குகளை தனக்கு ஆதரவாக மாற்றுவதற்கு முஸ்லிம் லீக்குடன் கூட்டணி வைத்துள்ளதாக கருதப்படுகிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் அதன் கட்டமைப்பை உறுதி செய்யும் முயற்சியில் எல்லா இடங்களிலும் அதனை நிறுவி வரும் நிலையில்.. தேர்தலில் பங்கெடுத்துவரும் நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் மகாராஷ்டிர முஸ்லிம் லீக் குறித்து ஊடகங்களில் தவறான செய்தி வதந்தியாக பரப்பப்பட்டது.. இதனை அறிந்தது நாங்கள் தமிழ்நாடு தலைமையகத்தை தொடர்பு கொண்டு அகில இந்திய அளவில் அதன் விஸ்தரிப்பு பணியை முன்னின்று நடத்திவரும் பொதுச்செயளாளர் அபூபக்கர் அவர்களிடம் இது பற்றி கேட்டோம்.. உடன் அவர் நாக்பூருக்கு தொடர்பு கொண்டு விசாரணை செய்ததில் அதை நாக்பூர் முஸ்லிம் லீக் கடுமையாக மறுத்திருக்கிறது இது பி.ஜே.பி முஸ்லிம்களை திசை திருப்ப செய்த செயல் ஆகும் நாக்பூரிலிருந்து வந்த எஸ்.எம். எஸ் செய்தியை கீழே தருகிறோம்...
ReplyDeleteIUML never alliance with BJP cause of ideological difference wrong propaganda about Nagpur IUML corporaters none can prove - Nagpur Aslam mulah M.C
மேலும் உத்தர்காண்ட் தேர்தலில் வடமாநில நிர்வாகிகள் கவணம் மேற்கொண்டுள்ள நிலையில் காங்கிரஸ்-முஸ்லிம் லீக் கூட்டணி தங்களை பாதிக்கக்கூடாது என்று முஸ்லிம்களிடம் வதந்தியை பரப்பி வருகிறது பி.ஜே.பி
முஸ்லிம்களின் ஐக்கியத்தை குலைக்கவும்.. தேர்தல் நடக்கும் இவ்வேளையில் வடக்கில் குழப்பத்தை உண்டுபண்ணி அது தனக்கு சாதக நிலையை எய்தவும்.. பிஜேபி ஆடும் விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று.. இது கடந்த 3 நாட்களாக விவாதம் நடந்து முடிந்தது எல்லா ஊடகங்களளையும் நாமும் பார்த்தோம்.. அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.. பி.ஜே.பி நினைக்கும் பலனை நாம் கொடுக்க வேண்டாம் ஏனெனில் அது இந்த வதந்தியை சிறு நிகழ்வை பெரிதாக்கி அரசியலில் லாபம் காண நினைப்பதை நாம அறிவோமாக
ReplyDelete