பத்திரிகையாளர் காசிமி கைதுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்

டெல்லி குண்டு வெடிப்பு வழக்கில் மூத்த பத்திரிகையாளர் காசிமியை கைது செய்துள்ளதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஈரானை தொடர்புபடுத்த வேண்டும் என்பதற்காக அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்படுத்திய நிர்பந்தத்திற்கு அடிபணிந்து இந்தியா இந்த கைது சம்பவத்தை நடத்தியுள்ளது என்ற அழுத்தமான சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலிய உளவு நிறுவனங்கள் கொடுத்த உளவுத் தகவல்களின் அடிப்படையில் காசிமி கைது செய்யப்பட்டுள்ளது மிகவும் துரதிஷ்டவசமானதாகும். அனைத்திற்கும் மேலாக அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவெனில், மீடியா தகவலின்படி இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொஸாத் காசிமியை விசாரிக்க இருக்கின்றது என்பதுதான்.


இஸ்ரேலிய தூதரக குண்டு வெடிப்பில் ஈரானுக்கு எந்த தொடர்புமில்லை என ஆரம்பத்தில் கூறி வந்த இந்தியா தற்போது திடீரென தன் நிலையை மாற்றிக் கொண்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இந்தியா மீது ஆதிக்கம் செலுத்தி வருகின்றன என்பதற்கு இது ஒன்றே போதுமான ஆதாரமாகும். காசிமி ஈரானிய செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.ஏ (IRNA)வுக்கு செய்தியாளராக இருந்துள்ளார். அவர் தனது எழுத்துக்களின் மூலம் இஸ்ரேலின் அக்கிரமத்தினைக் கண்டித்து வந்துள்ளார். சியோனிசத்திற்கு எதிராக எழுதப்படும் கருத்துக்களை இஸ்ரேல் கண்காணித்து வருகின்றது என்பதற்கு இது ஒரு சான்றாகும். இந்த கைதின் மூலம் இஸ்ரேலிய சியோனிஸத்தையும் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைகள் மற்றும் அராஜகத்தை எழுதும் எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது இஸ்ரேல்.

அதேபோன்று சமீபத்தில் சில பத்திரிகைகள் பாப்புலர் ஃப்ரண்டிற்கு இந்த குண்டு வெடிப்பில் தொடர்பபிருக்கலாம், ஏனெனில் பாப்புலர் ஃப்ரண்ட் இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்று எழுதியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் உள்விவகாரம் மற்றும் வெளியுறவில் இஸ்ரேல் தலையிடுவது நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தானதாகும். மேலும் காசிமியின் கைது பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் ஆகும்.

காசிமி எந்த அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என அவøர கைது செய்தவர்கள் விளக்கமளிக்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை வைத்துள்ளது. அதேபோன்று எந்தவொரு வெளிநாட்டு உளவு அமைப்புகளும் இந்திய மண்ணில் விசாரணை நடத்த அனுமதிக்கக் கூடாது என மத்திய அரசை பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக் கொண்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பத்திரிகையாளருக்கு ஆதரவாக துணிச்சலாக முன் வந்து குரல் கொடுத்து வரும் பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றது.

Related

இயக்கங்கள் 4003361738023406190

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item