இஸ்ரேலும், அமெரிக்காவும் சர்வதேச தீவிரவாதத்தின் சின்னங்கள்: ஈரான்

அமெரிக்காவும், இஸ்ரேலும் சர்வதேச தீவிரவாதத்தின் உண்மையான சின்னங்கள் என்று இண்டர்நேசனல் இஸ்லாமிக் அவேக்கனிங் கான்ஃப்ரன்ஸ் பொதுச்செயலாளர் அலி அக்பர் விலாயத்தி கூறியுள்ளார். ஈரானுக்கு எதிராக மனரீதியான போரை வலுப்படுத்தும் விதமாக பொய் பிரச்சாரங்களை இந்நாடுகள் நடத்திவருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

கிழக்கு ஜெருசலம் நோக்கி பேரணியாக செல்லும் ஆசியா நாடுகளைச் சார்ந்த ஃபலஸ்தீன் ஆதரவு தன்னார்வ தொண்டர்களை வரவேற்று அவர்கள் மத்தியில் உரைநிகழ்த்தினார் அலி அக்பர் விலாயத்தி.

மேலும் அவர் கூறியது:கூட்டுப் படுகொலைகளை நடத்தியும், சிலரை தேடிப்பிடித்து கொலைச் செய்தும் எதிரிகளை அழிக்க முயலும் அமெரிக்காவும், இஸ்ரேலும்தான் உண்மையான பயங்கரவாதிகள். ஈரானில் அணு விஞ்ஞானிகளை கொலைச்செய்ய அமெரிக்காவின் அதிபர் வேட்பாளர்கள் பகிரங்கமாக அழைப்புவிடுப்பது இதற்கு ஆதாரமாகும்.

சிரியா மக்களுக்கு உதவுவதற்காக அல்ல, மாறாக மேற்கத்திய நாடுகள் அங்கே பிரச்சனைகளை உருவாக்க முயற்சிக்கிறார்கள். இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்புகளை பலவீனப்படுத்தவும் முயல்கிறார்கள். இவ்வாறு விலாயத்தி கூறினார்.

கிழக்கு ஜெருசலத்தை நோக்கி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தன்னார்வ தொண்டர்களின் பேரணி துவங்கியுள்ளது. ஃபலஸ்தீன் பூமி தினமான மார்ச் 30-ஆம் தேதி இப்பேரணிகள் அனைத்தும் ஜெருசலத்தில் சங்கமிக்கும்.

Related

தீவிரவாத வேட்டை: சிதம்பரம் வீட்டிற்கு முன் தர்ணா மறுப்பு

தீவிரவாதத்தின் பெயரால் முஸ்லிம் இளைஞர்களை பொய் வழக்கில் சிக்கவைக்கும் போலீஸ் நடவடிக்கையை கண்டித்து மனித உரிமை ஆர்வலர்கள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு முன்னால் நடத்தவிருந்த போர...

மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம்

ராணுவ ஆட்சியில் இருந்து ஜனநாயகத்தை நோக்கி திரும்பும் மியான்மரில் உள்ள ராக்கினே மாகாணத்தில் கடந்த வாரம் துவங்கிய வகுப்புவாத கலவரம் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகும் ஓயவில்லை. இம்மாகாணத்தின் ...

தமிழகத்தில் பயங்கர வெடிப்பொருட்கள் பறிமுதல்! மௌனமான ஊடகங்கள்

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் பெருமளவிலான வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட பிறகும் அதனை ஒரு சாதாரண செய்தியாகவே ஊடகங்கள் வெளியிட்டன.அண்மையில் பா.ஜ.க மதுரை மாநாட்டிற்கு முன்பாக சைக்கிளில் பொருத்தப்பட...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item