துனிசியாவை உலுக்கிய இஸ்லாமிய இயக்கங்களின் பேரணி

புதிய அரசியல் சட்டத்தின் அடிப்படை இஸ்லாமிய சட்டங்களாக அமைய வேண்டும் என கோரி துனீசியா பாராளுமன்றத்திற்கு முன்பு பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பான இஸ்லாமிக் ஃப்ரண்ட் இப்பேரணிக்கு ஏற்பாடு செய்தது.

‘இஸ்லாமே எங்கள் மார்க்கம்’ ‘குர்ஆனே எங்களின் அரசியல் சட்டம்’ என்று எழுதப்பட்ட பேனர்களை ஏந்திய ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியில் பங்கேற்றனர். இஸ்லாமிய தத்துவங்களின் அடிப்படையில் அல்லாத சட்டங்களை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று பேரணியில் பங்கேற்றோர் கூறினார்கள்.

ஆளுங்கூட்டணி அரசில் முக்கிய கட்சியான அந்நஹ்ழா இப்பேரணியில் கலந்துக்கொள்ளவில்லை. விபச்சாரமும், ஊழலும், மதுபானத்தையும் இஸ்லாம் தடைச் செய்துள்ளது. ஆனால், மதுபானம் இப்பொழுதும் நாட்டின் பல பகுதிகளில் விற்பனைச் செய்யப்படுவதாக பேரணியில் பங்கேற்றவர்கள் கூறினர். மதுபானத்தையும், விபச்சாரத்தையும் உடனடியாக தடைச்செய்ய இயலாது என்று அந்நஹ்ழா கூறியிருந்தது.

ஷரீஅத்(இஸ்லாமிய சட்டங்கள்) என்பது பெண்களுக்கு மதிப்பளிப்பதாகும். விபச்சாரமும், திருட்டுக்களும் இல்லாத சூழலை உருவாக்கவேண்டும் என்பதுதான் ஷரீஆவின் லட்சியமாகும். சட்டங்களை அமுல்படுத்தி ஆட்களை கொல்வது அல்ல என்று பேரணியில் கலந்துகொண்ட முஸ்லிம் பெண்மணிகள் கூறினார்கள்.

Related

சமுதாயம் 4734505894479493165

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item