கோவை சிறைவாசிகள் மீட்பு தொடர் போராட்டம்...

இலங்கை அரசு புலிகளுக்கு எதிராக நடத்திய போரில் அப்பாவி தமிழ் மக்களை கொடுரமாக கொன்றுகுவித்த ஆவணங்களை உலகிற்கு சேனல் நான்கு வெளிச்சம் போட்டுகாட்டியதன் விளைவு இன்றைக்கு ஐ.நா.வின் போற்குற்ற்சாட்டுக்கு இலங்கை ஆளாகி உள்ளது... இலங்கை எதிரான ஐ.நா.தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா... எதிர்க்குமா... என்கிற பரபரப்பான கேள்வி நாட்டின் பாமர தமிழனையும் பாராளுமன்ற அவை நடவடிக்கைகளை உற்றுநோக்க செய்தது... என்றைக்கும் இல்லாத அதிசயமாக தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஐ.நா.தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென பாராளுமன்றத்திலும் வெளியிலும் குரல் எழுப்பியதன் விளைவு இந்தியா இலங்கைக்கு எதிரான ஐ.நா.தீர்மானத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியது...

இதற்கிடையே கடந்த ஏழு மாதகாலமாக ஒரே இடத்தில் கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்புதெரிவிக்கும் இடிந்தகரை மக்களின் ஜீவ  உரிமை போராட்டம் ஒரு புறம்... ஊடகங்களும் மக்களும் கொஞ்சம் இளைப்பாற சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தல்... ஏற்க்கனவே அனைவரும் எதிர்பார்த்தபடியே அதிமுக வெற்றிகன்டாலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிமுக தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து கட்சிகளையும் வைப்புதொகையை இலக்கசெயதது அனைவரையுமே மலைக்க செய்துள்ளது...

தேர்தல் முடிந்த கையுடன் தமிழகத்தின் அமைச்சரவையை முதல்வர் கூட்டினார் அக்கூட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார்... இன்றைக்கு அணு உலையால தமிழகமே கொந்தளித்துகொண்டிருக்கிறது...

இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில் பல்லாண்டுகாலமாக நீதி மறுக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து எதிர்கால நினைவுகளை மறந்து சிறைபட்டுள்ள அப்பாவி முஸ்லிம் கைதிகள் மற்றும் பத்தாண்டுகாலதிற்க்கும் மேலாக சிறைபட்டுள்ள சிறைபட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் எதிர்வரும் அண்ணா பிறந்தநாளில் விடிவிக்ககோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் தொடர்போராட்டத்தை மனித உரிமை அமைப்புகள் முன்னெடுத்துள்ளன..

கடந்த பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கோவை சிறைச்சாலைகளில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு முடங்கியுள்ள அப்பாவிகள் அவர்களின் சிறைவாசத்தால் சராசரியான வாழ்க்கை முறையை இழந்துவிட்ட அவர்களின் குடும்பத்தார்.. மகனை இழந்தவர்கள்... கணவனை இழந்த மனைவிகள்... தகப்பனை இழந்த பிள்ளைகள்...இப்படியாக வாழ்க்கையே சூனியமாகிவிட்ட பரிதாப்த்திற்க்குரிய மக்களின் இழந்த மகிழ்ச்சியை மீட்கவேண்டிய மனித நேய அவசியம்...

கூடங்குளம் நிகழ்விற்கு சற்றும் சளைக்காத வகையில் இன்றைக்கு சிறைவாசிகள் மீட்ப்பும் வெகுஜன மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

பொதுவாக பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறைபட்டிருக்கும் சிறைவாசிகளின் நன்னடத்தை அவர்களின் வழக்கின் நிலை இவற்றை கவனத்தில் கொண்டு ஒவ்வொரு வருடமும் முன்னாள் முதல்வர் அமரர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ம் தேதி சம்மந்தப்பட்ட சிறைவாசிகளை விடுதலை செய்யும் முறை தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது...கடந்த திமுக ஆட்சியிலும் இம்முறை நடைமுறை படுத்தப்பட்டது... மதுரையில் வேட்டிகொள்ளப்பட்ட கவுன்சிலர் தோழர் லீலாவதி அவர்களின் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த கொலைகுற்றவாளிகள்கூட இம்முறையில் விடுவிக்கப்பட்டார்கள்... ஆனால் ஒரு முஸ்லிம் சிறைவாசிகூட விடுவிக்கப்படவில்லை... ஏன் இந்த பாரபட்சம் என்பதுதான் நமது கேள்வி...

இன்றைக்கும் சிறையி வாடும் முஸ்லிம்களில் ஒருவர்கூடவா விடுதலைக்கு தகுதி பெறவில்லை... ஒருவர்கூடவா நன்னடத்தை தகுதி பெறவில்லை...? மற்ற மாநிலங்களில் தாமதிக்கப்பட்ட தீர்ப்பை கணக்கிகொண்டே கைதிகளுக்கு முன் விடுதலை நடைமுறையில் இருக்கும்போது தமிழகம் மட்டும் ஏன் அதனை கடைபிடிக்க மறுக்கிறது...

இதுவரை கோவை சிறைவாசிகளின் பிரச்னையை முஸ்லிம்களுக்குள் மட்டுமே முஸ்லிம்கள் விவாதித்து வந்தார்கள்... ஊடகங்களின் கவனத்தை பெறுவதற்கு முஸ்லிம் சிறைவாசிகளின் பிரச்னை தவறிவிட்டது முஸ்லிம்கள் என்கிற வட்டத்துக்குள்ளேயே இவ்விவகாரம் அடைக்கபட்டுவிட்டதால் இது ஒரு சமூக பிரச்சனையாகவே இதுவரை அடையாளமகானபட்டது... ஆனால் உண்மை அதுவல்ல இது ஒரு சமூகம் சார்ந்த பிரச்சனையல்ல... அப்பட்டமான மனித உரிமை மீறல்... என்பதை உலகிற்கு உணர்த்தும் காலம் கனிந்துவிட்டது... ஆகையினால்தான் கோவை சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கைதிகளின் பிரச்சனையை விவாதத்தை இன்றைக்கு பொதுதளத்திற்கு கொண்டு செல்ல முனைந்துள்ளது முற்ப்போக்கான சிந்தனைகளை கொண்ட இசுலாமிய இளைஞர்குழு...

சிறைகதவுகளுக்கு பின்னால் சிதைந்து போயுள்ள அப்பாவிகளின் வாழ்க்கையை மீட்க்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு என்பதை தமிழ்மண்ணில் தமிழுனர்வாளர்களை  கொண்டும்  மனித உரிமை போராளிகளை கொண்டும் நாம் அரசின் கண்ணியமான கவனத்திற்கு கொண்டு செல்லபோகிறோம்...

இஸ்லாமிய அமைப்புகளின் இதுவரையிலான சிறைவாசிகள் மீட்ப்பு நடவடிக்களை நாம் குறைந்து மதிப்பிடவில்லை... அவர்களின் வீரியத்தை நாம் குறைகூறவில்லை... ஆனால் போராட்டமுறை மாறவேண்டும் என்பதுதான் நமது முழக்கம்...

இதோ இன்றைக்கு முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட மற்ற சிறைவாசிகளின் விடுதலைக்காக தமிழ் தேசியவாதிகளும் மனித உரிமை போராளிகளும் போராட தயாராகிவிட்டனர்... ஊடகங்கள் தங்களது பார்வையை சிறைவாசிகளின் பக்கம் திருப்பியுள்ளன...

மார்ச் 30 முதல் ஆகஸ்டு இறுதிவரை இக்கவன ஈர்ப்பு போராட்டம் தமிழ் தளத்தில் கொண்டு செல்லப்படும்... இப்போராட்டம் பலவாறாக பரிமாணம் பெரும்... இது எந்த தனிநபரையோ அமைப்பையோ அரசியலையோ முன்னிலை படுத்தும் வேலையல்ல... முழுக்க முழுக்க மனிதம் இன்னும் மாயந்துவிடவில்லை... என்பதை உலகிற்கு உணர்த்தும் நிகழ்வு...

மனித உரிமை போராளிகளே... தமிழுனர்வாளர்களே... நடுநிலை தவறாத தமிழ் மக்களே... விடியலின் வெளிச்சம் என்றைக்காவது ஒருநாள் எங்கள் குடிசைக்குள்ளும் ஒளிராத என்கிற ஏக்கத்தோடும் துக்கத்தோடும் நிம்மதி என்பதையே நிரந்தரமாக தொலைத்துவிட்ட மக்களின் மகிழ்ச்சியை மீட்க்க அணிதிரள்வோம்... மாற்றம் நிச்சயமாக மக்களால் ஏற்படுத்தகூடியதே... அதனை சாத்தியமாக்கிட சமதளத்தில் பயணிக்க தயாராகுவோம்...

மக்கள் எழுச்சியால் மார்ச் 30 மாற்றத்தை ஏற்படுத்தும்...  இந்த மாபெரும் மக்கள் போராட்டம் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு திருப்பூரில் முதல் களம் காண்கிறது... சட்டப்போராளி வழக்கறிஞர் சே.ஜெ.உமர்கயான் அவர்களின் அதீத முயற்சியால் பேச்சளவில் பேசப்பட்ட  நிகழ்வுகள் செயல்வடிவம் பெற்று அடுத்த இலக்கை நோக்கி நகர துவங்கியுள்ளது... மாநிலமெங்கும் உள்ள இசுலாமிய இளைஞர்களே... உங்கள் பகுதிமக்களுக்கு இந்நிகழ்வு பற்றிய செய்தியை அறியத்தாருங்கள்... மற்ற சமூக மக்களுக்கும் இவ்விவகாரத்தில் உள்ள உண்மைகளை எடுத்து சொல்லுங்கள்... நமது வலிமையான கட்டமைப்பான முஹல்லாஹ் ஜமாத்துகளின் கவனத்திற்கும் இவற்றை கொண்டு செல்லுங்கள் போராடகளத்திற்கு மக்களை திரட்டுங்கள்...

இது அரசுக்கு எதிரான புரட்சியல்ல... மனிதநேயம் கொண்ட மக்களின் உணர்ச்சி... இது அரசுக்கு எதிரான கிளர்ச்சியல்ல...மக்களின் எழுச்சி....

நன்றி..வேங்கை சு.செ.இப்ராஹீம்.

Related

சமுதாயம் 5530827689069008156

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item