PFI சகோதரர் கொல்லப்பட்ட வழக்கில் 3 CPI (M) கட்சியினர் கைது

கேரளாவில் NDF-ன் (தற்போது பாப்புலர் ஃப்ரண்ட்) சகோதரர் முஹம்மது ஃபஸல் கொல்லப்பட்ட வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் CPI (M) கட்சியினைரைச்சேர்ந்த மூவரை கைது செய்துள்ளனர்.

NDF இயக்கத்தின் தளச்சேரி பகுதி தலைவராக இருந்து வந்தவர் முஹம்மது ஃபஸல். இவர் கடந்த 2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிகாலை பொழுதில் நாளிதழ் விநியோகித்துக்கொண்டிருந்த போது பயங்கர ஆயுதங்களுடன் வந்த சில மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இவ்வழக்கினை விசாரித்து வந்த சி.பி.ஐ அதிகாரிகள் CPI (M) கட்சியினரைச் சேர்ந்த அருண் தாஸ் (எ) அருட்டன் (28), எம்.கே. காலேஷ் (எ) பாபு (34) மற்றும் பி.எம் அருண் குமார் ஆகிய மூவரையும் தற்போது கைது செய்துள்ளனர். இது தொடர்பாக அம்மூவரையும் மார்ச் 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி கட்டளையிட்டுள்ளார். இவ்வழக்கு தொடர்பாக அவர்களை மேலும் விசாரிக்க வேண்டுமென்பதற்காக அவர்களை தங்களது கட்டுப்பாட்டில் ஒப்படைக்கவேண்டுமென சி.பி.ஐ அதிகாரிகளி நீதிமன்றத்தில் மனு  கொடுத்துள்ளனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தி வரும்  "தேஜஸ்" நாளிதழின் ஏஜெண்டாக பணியாற்றிக்கொண்டிருன்ந்தவர் முஹம்மது ஃபஸல். அப்பகுதி மக்களிடையே தேஜஸ் நாளிதழுக்கு அதிக அளவில் சந்தாதாரர்களை சேர்த்துக்கொண்டிருந்ததால் அவர் மீது அப்பகுதி CPI (M)-ன் உறுப்பினர்கள் அவர் மீது காழ்புணர்ச்சி கொண்டிருந்தனர். CPI (M) நடத்தும் பத்திரிக்கையான "தேஷபிமானி" பத்திரிக்கையை விட அதிக அளவில் "தேஜஸ்" பத்திரிக்கை அப்பகுதியில் விற்பனையாகி வந்தது.

முஹம்மது ஃபஸல் கொல்லப்பட்டதற்கு மேற்கூறிய காரணம் ஒன்றாக இருந்தாலும், மற்றொரு காரணம் முஹம்மது ஃபஸல் முன்னர் CPI (M)-ன் உறுப்பினராக இருந்துவந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி PFI இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். அத்தோடுமட்டுமல்லாமல் இன்னும் பிற CPI (M) உறுப்பினர்களை NDF-ல் இணையுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து CPI (M) உறுப்பினர்களிடத்தில் இருந்து அவருக்கு தொடர்ந்து மிரட்டல் விடப்பட்டதாகவும் சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முஹம்மது ஃபஸலை கொலை செய்ய திட்டமிட்ட சி.பி.ஐ.எம் தலைவர்கள் கடந்த அக்டோபர் 22, 2006 ஆம் ஆண்டு அதிகாலையில் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்து முஹம்மது ஃபஸலை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். முதற்கட்ட விசாரணையில் சங்கப்பரிவார கும்பல்களான RSS இதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டது. மேலும் CPI (M)-ன் தலைவர்களும் இக்கொலை வழக்கில் RSS-ஐயே குற்றம் சுமத்தினர். அப்போது உள்துறை அமைச்சராக செயல்பட்டுக்கொண்டிருந்த கொடியேரி பால கிருஷ்ணனும் சங்கப்ரிவாரத்தினரை குற்றம் சுமத்தி வழக்கின் விசாரணையை திசை திருப்ப முயற்ச்சித்திருக்கிறார்.

இவ்வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என முஹம்மது ஃபஸலின் மனைவி மரிவு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அதனை ஏற்ற நீதிமன்றம் இவ்வழக்கினை சி.பி.ஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. முஹம்மது ஃபஸல் கொல்லப்பட்டபோது CPI (M) ஆளும் கட்சியாக செயல்பட்டுக்கொண்டிருந்தது. இவ்வழக்கினை நேர்மையாக விசாரித்து வந்த பல காவல்துறை அதிகாரிகளால் இவர்களால் பணி மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related

சமுதாயம் 4811728503459453618

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item