அமெரிக்கா நிர்பந்தம்: இந்தியா நிராகரிக்கும் – அஹ்மத் நஜாத்

இந்தியாவின் மீது அமெரிக்கா செலுத்திவரும் நிர்பந்தத்தை ஈரான் பொருட்படுத்தாது என்று அந்நாட்டின் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார். இரு நாடுகள் இடையேயான உறவு கூடுதல் வலுப்பெறும் என்று நஜாத் தெரிவித்துள்ளார்.

டெஹ்ரானில் அதிபர் ஹவுஸில் வைத்து மாத்யமம் பத்திரிகையின் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார் நஜாத்.

இந்தியா உள்பட பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்தால் காலனி ஆதிக்க சக்திகளின் வீழ்ச்சி பரிபூரணமடையும் என்று நஜாத் கூறினார். டெல்லியில் இஸ்ரேல் தூதரக அதிகாரியை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஈரானுக்கு பங்கில்லை என்று நஜாதுடன் இருந்த முன்னாள் அமைச்சரும், அரசுக்கு முக்கிய ஆலோசகருமான டாக்டர்.விலாயத்தி விளக்கமளித்தார்.

இந்தியா நடத்தும் அனைத்து விசாரணைக்கும் ஈரான் முழு ஒத்துழைப்பை அளிக்கும். மூன்று ஈரானிகளை மையமாக கொண்டு விசாரணை நடைபெறுவது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில் விலாயத்தி இவ்வாறு தெரிவித்தார்.

அமைதியான வழிகள் மூலமாக மட்டுமே ஈரான் பயணிக்கும். தீவிரவாதத்தை அரசு நிர்வாக பாணியாக மாற்றிய இஸ்ரேல் எவ்வித சூழ்ச்சிகளையும் செய்வார்கள். ஈரானுக்கு இந்த வழக்கம் இல்லை என்று விலாயத்தி மேலும் கூறினார்.

இந்தியா-ஈரான் இடையேயான உறவு நூற்றாண்டுகள் பழமையானது. எதிரிகளின் சூழ்ச்சிகளால் அதனை தகர்க்க முடியாது என்று சர்வதேச விவகாரங்களில் ஈரான் அதிபர் நஜாதின் ஆலோசகரான ஷைகுல் இஸ்லாம் கூறினார்.

இந்தியா-பாரசீக நாகரீகத்திற்கு எத்தனையோ ஆண்டுகால பாரம்பரியம் உள்ளது. ஒரு நூற்றாண்டு கூட பழமை இல்லாத இஸ்ரேலும் இதர நாடுகளும் சதித் திட்டம் தீட்டினாலும் அதனை தகர்க்க முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து இந்தியா ஈரானில் இருந்து இறக்குமதிச் செய்யும் கச்சா எண்ணையின் அளவை குறைக்கும் என நம்பவில்லை என்று ஈரான் தலைவர்கள் கூறினர். ஈரானில் இருந்து எண்ணெயை இறக்குமதிச் செய்வது இந்தியாவின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

இச்சூழலில் ஏகாதிபத்தியத்தின் தந்திரங்களை அடையாளம் கண்டு இரு நாடுகள் இடையேயான உறவுகளில் நெருக்கம் ஏற்படுத்தவும் இந்தியா தயாராகும் என நம்புவதாக ஈரான் தலைவர்கள் தெரிவித்தனர்.

Koothanallur Muslims

Related

சமுதாயம் 2818967886204060427

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item