SDPI பேரணியில் போலீஸ் அராஜகம் – தடியடி, கைது
http://koothanallurmuslims.blogspot.com/2012/02/sdpi.html
சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி உறுப்பினர்கள் மீது சுமத்திய தேசத்துரோக வழக்கை வாபஸ்பெறக் கோரி SDPI நடத்திய தலைமைச் செயலகத்தை நோக்கிய பேரணியில் போலீஸ் அராஜகம்.
SDPI உறுப்பினர்கள் மீது போலீஸ் நடத்திய தடியடியில் ஏராளமான உறுப்பினர்களுக்கும், போலீசாருக்கும் காயமேற்பட்டது. இன்று காலை 12.20 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள தியாகிகள் மண்டபத்தில் இருந்து பேரணி துவங்கியது. துவக்க உரைக்கு பின்னர் சிறிய அளவில் போலீசாருக்கும், SDPI உறுப்பினர்கள் இடையே தள்ளு. முள்ளு நிகழ்ந்தது. இதனைத் தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லாத சூழலில் போலீசார் திடீரென தடியடி நடத்த துவங்கினர். பின்னர் தண்ணீரை பீச்சி, கண்ணீர் புகையை பிரயோகித்தனர். பேரணியில் இருந்து கலைந்து சென்ற SDPI உறுப்பினர்களை தேடிப்பிடித்து தாக்கிய போலீசார் அவர்களை கைது செய்தனர்.