டெல்லி, ஜார்ஜியா தாக்குதல்களில் பங்கில்லை – ஹிஸ்புல்லாஹ்

http://koothanallurmuslims.blogspot.com/2012/02/blog-post_8587.html

இந்தியாவிலும், ஜார்ஜியாவிலும் இஸ்ரேல் தூதர்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல்களில் பங்கில்லை என்று ஹிஸ்புல்லாஹ் போராளி இயக்க தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் கூறியுள்ளார்.
அதேவேளையில், இஸ்ரேல் கொலைச் செய்த ஹிஸ்புல்லாஹ் கமாண்டர் இமாத் முக்னியின் உயிருக்காக பழிவாங்குவோம் என்று நஸ்ருல்லாஹ் மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார்.
முக்னியின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தில் நடந்த பேரணியில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார் நஸ்ருல்லாஹ்.
‘நாங்கள் பழியை தீர்க்கப்போவது இஸ்ரேலிய ராணுவ வீரர்களிடமோ, தூதர்களிடமோ அல்ல. இது அந்த மாபெரும் தலைவரின்(முக்னி) உயிர்தியாகத்தை சிறுமைப்படுத்துவதற்கு சமமாகும். நாங்கள் யாரை குறிவைத்துள்ளோம் என்பதை இஸ்ரேலுக்கு நன்றாக தெரியும். அவர்கள் தற்பொழுது பலத்த பாதுகாப்பில் உள்ளனர். ஆனால், ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்களின் நரம்புகளில் குருதி ஓடுவது நின்றுவிடவில்லை என்றால் முக்னியின் உயிருக்கு அழகாக பழிவாங்கும் தினம் வந்தே தீரும்!’ என்று நஸ்ருல்லாஹ் கூறினார்.