INTJ முயற்சியால் சங் பரிவார் சூழ்ச்சி தடுக்கப்பட்டது!

சமுதாயப் பெண்களை காதல் என்கிற பெயரில் வளைத்து அவர்களை மதம் மாற்றும் செயலுக்கு ஊக்கமும் உதவித் தொகையும் வழங்கும் இந்துத்துவ அமைப்புகளின் சூழ்ச்சிக்கு தொடர்ந்து நம் பெண்கள் பலியாகி வருகின்றனர். நம்மால் இயன்ற அளவு பிரசாரத்தின் மூலமும் கண்காணிப்பு மூலமும் இதை தடுத்து வருகிறோம்.! இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று கடற்கரையில் பிரச்சாரத்திற்கு சென்ற போது பிடிபட்ட 10 முஸ்லிம் பெண்களில் 9 பேர் முஸ்லிம் அல்லாதவர்களுடன்    வந்திருப்பது தெரிந்து சமுதாயம் அதிர்ந்து போனது.  

 

அதே போன்று அவர்களை திருமணம் செய்யும் பெண்கள் இஸ்லாமிய பெயர் மற்றும் அடையாளங்களோடு பத்திரிகை அடித்து பகிரங்கமாக முஸ்லிம்கள் அதிகம் நிறைந்த பகுதிகளிலேயே இந்த திருமணங்களை   நடத்தும் நிலை சமிபத்தில் அதிகமாகி உள்ளது. இது வேண்டுமென்றே நம்மை வம்புக்கிழுத்து நம் உணர்வுகளை சீண்டி  பார்க்கும் செயலாக   உள்ளது.

இது போன்ற ஒரு திருமண வரவேற்பு பத்திரிகை நமது கைகளில் கிடைத்தது. திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள அந்தப் பெண்ணின் பெற்றோரை கிளை நிர்வாகிகள் அணுகி விசாரித்த போது அவர்கள் நாங்கள் தலை முழுகி விட்டோம் எங்கள் பேச்சை கேட்காமல் இது நடக்கிறது என சொன்னார்கள்.

பெற்றோர் சம்மதம் இல்லாத   நிலையில் இது வேண்டும் என்றே வம்புக்கிழுக்கும் நோக்குடன் முஸ்லிம்கள் அதிகம் வாழும் ,  பெண்ணின்  பெற்றோர் வாழும் பகுதியில் மண்டபத்தை தேர்ந்தெடுத்து சீண்டிப்  பார்க்கும் இந்துத்துவா முயற்சி என அறிந்து மண்டப நிர்வாகியிடம் இந்த நிகழ்ச்சி நடந்தால் பிரச்னை ஏற்படும் என எச்சரித்தும் பலனின்றி போனதால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மற்றும் திருவல்லிக்கேணி நிர்வாகிகள் ஜாம் பஜார் காவல் நிலைய ஆய்வாளருக்கும் உதவி ஆணையருக்கும் புகார் அளித்து இதை தடுத்து நிறுத்த கோரிக்கை விடுக்கப் பட்டது.


 

மேலும் நீங்கள் இதில் நடவடிக்கை எடுக்கவில்லையாயின் மாபெரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சந்திக்க நேரிடும் என உளவுத்துறை அதிகாரிகளிடத்தில் சொன்னதை அடுத்து உளவுத்துறை அதிகாரிகள் சம்பந்தப் பட்ட வீட்டிற்க்கே நேரே சென்று பிரச்சனையின் தீவிரத்தை எடுத்து சொல்லி, இந்த நிகழ்ச்சி நடந்தால் மிகப் பெரும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆகையால் நீங்கள் வேறு பகுதியில் வைத்துக் கொள்ளுங்கள் ! என அதிகாரிகள் கூறியுள்ளனர். கழுத்தில் புது தாலியும் நெற்றியில் குங்குமமும் வைத்திருந்த அந்தப் பெண்ணிடம் பேசிய அதிகாரிகள் "நீ எப்போது இந்துவை திருமணம் செய்து விட்டாயோ அப்போதே நீ சட்டப்படி உன் பெயர் மாற்றி அந்தப் பெயரில் பத்திரிகை அடித்து நடத்துவது தான் முறையாகும்" என எடுத்து சொல்லியதன் பெயரில் இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட மண்டப வாசலில் அதற்கான அறிவிப்பும் எழுதி வைக்கப்பட்டது. இந்துத்வாவின் குழப்பத்தை முறியடிக்க இந்திய தவ்ஹீத் ஜமாஅத் செய்த முயற்சியை பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். அல்ஹம்துலில்லாஹ்!


உங்கள் கண் முன்னே ஒரு தீமை நடந்தால் கரம் கொண்டு தடுங்கள், இயலவில்லை என்றால் நாவால் தடுங்கள் -நபி மொழி

Related

இயக்கங்கள் 6088140176288233018

Post a Comment

  1. //உங்கள் கண் முன்னே ஒரு தீமை நடந்தால் கரம் கொண்டு தடுங்கள், இயலவில்லை என்றால் நாவால் தடுங்கள் -நபி மொழி//

    அப்ப, முதல்ல கை பேசும், அப்புறம் தான் நா பேசுமா?

    ReplyDelete
  2. உங்க காமெடிக்கு எல்லையே இல்லாம போய்டிச்சு. அந்தப் பொண்ணு தான் காறித் துப்பிட்டா இல்லை. தொடச்சிக்கிட்டு ஓட வேண்டியது தானே?

    ReplyDelete

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item